ADVERTISEMENT
மதுரை--'மதுரை அரசு மருத்துவமனை 226வது வார்டு வாசலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கழிப்பறை துர்நாற்றமும் தாங்கமுடியவில்லை' என, நோயாளிகள் கதறுகின்றனர்.
நோயாளிகள் கூறியதாவது: உடல்நலம் சரியில்லை என்று தான் மருத்துவமனைக்கு வருகிறோம். 226வது வார்டிலுள்ள சுகாதாரமற்ற நிலையால், நோய் தொற்று வந்துவிடுமோ என்ற பயத்துடனே சிகிச்சை பெறுகிறோம். அத்துடன் கழிப்பறை துர்நாற்றத்தையும் தாங்க முடியவில்லை.
226, 227, 228வது வார்டுகளின் சுவர்களில் மழைநீர் கசிந்து இடிந்து விழுவது போல ஆபத்தாக உள்ளது. பழைய கட்டடங்களை சீரமைக்காவிட்டால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.
90 வது வார்டில் இடமில்லாததால் புற்றுநோயாளிகளை நடைபாதையில் படுக்கவைத்துள்ளனர். சிகிச்சைக்காக வந்து விட்டதால் வேறு வழியின்றி சகித்து கொண்டு இருக்கிறோம். முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் போலீஸ் அவுட்போஸ்ட் எதிரேகட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் செயல்படவில்லை.
வராத குடிநீருக்குகைப்பிடியுடன் டம்ளர்களை பாதுகாப்பது வேடிக்கையே. அரசு மருத்துவமனையில் அதிகம் செலவாகாது என வருகிறோம். ஆனால் குடிநீரையே விலைக்கு வாங்கி குடித்து வருகிறோம் என, நோயாளிகள் வேதனை தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (3)
சும்மா இருங்க. சுத்தத்திலே மூணாவது இடம் ... ஒன்றிய அரசே
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பொதுவாக மக்கள் சேவையில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் ஊழியர்களும் இதே பொதுமக்கள் மத்தியில்தான் வசிக்கின்றனர்.இதே நபர்கள் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் கண்டதும் நேரடியாகவோ போன் மூலமாகவோ யார் புகார் அளித்தாலும் உடனடியாக கவனத்தில்கொண்டு செயல்முறைப்படுத்தும் வழிவகைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இங்கு என்னவென்றால் புகாராக எழுத்து வடிவில் கொடுக்கவேண்டும் .அந்த உடணடி செயல்படுத்துப் பொறுப்பை உண்மையிலேயே மக்கள்நலனில் அக்கறைகொண்ட நீதி, நேர்மையுள்ள அதிகாரிகள் ஊழியர்கள் இதற்காகவே பிரத்யேகமாக தேர்வுசெய்து பணிசெய்யவேண்டும். நாடு முன்னேற பல அதிரடி நடவடிக்கைகள் தேவை.யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.நாடும் நாட்டுமக்களும் நலத்துடன் முன்னேறவேண்டும். நலம்பெறவேண்டும். வந்தேமாதரம்,ஜெய்ஹிந்த்.