Load Image
Advertisement

36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ:

 36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ:
ADVERTISEMENT
புதுடில்லி: ஒரே ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 (எல்.வி.எம்.-3) ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை வரும் 23-ம் தேதி விண்ணில் ஏவ உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 (எல்.வி.எம்.-3) ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் .

Latest Tamil News

வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. குறைந்த புவி சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் அக்.22 ம் தேதி அதிகாலை 12.07 மணிக்கு துவங்குகிறது.


வாசகர் கருத்து (4)

  • P Ravindran - Chennai,இந்தியா

    இவன் பெயரே இவன் எப்படிப்பட்டவன் என்று கூறுகிறது

  • பச்சையப்பன் கோபால் புரம் -

    …..

  • பச்சையப்பன் கோபால் புரம் -

    …..

  • vijay - coimbatore,இந்தியா

    வெற்றியடைய வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்