புனே: பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் இல்லை எனவும், கடந்த டிசம்பரிலேயே கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்திவிட்டதாகவும், அப்போது கையிருப்பில் இருந்த 10 கோடி டோஸ் வீணானதாகவும், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு டோஸ்கள் தடுப்பூசி செலுத்திய நிலையில் ஒமைக்ரான் வகை கோவிட் தொற்று பரவியதால் பூஸ்டர் டோசும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அமைப்பின் வருடாந்திர பொதுக் கூட்டம் புனேவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா பங்கேற்றார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் கடந்த 2021 டிசம்பர் முதல் கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்தி விட்டோம். அப்போது கையிருப்பில் இருந்த சுமார் 10 கோடி டோஸ்கள் காலாவதியாகி விட்டதால் வீணாகி விட்டது. பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் தற்போது மக்களிடையே ஆர்வம் இல்லை.
இதனால் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தேவை இல்லை. ஒமைக்ரான் தொற்றை தடுக்கும் வகையில் தனித்துவமான கோவிட் தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (12)
கொரோனா குறித்ததான பயம் போய்விட்டதால் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் மக்களிடையே ஆர்வம் இல்லை.
இப்படி கோடிக்கணக்கில் வீண் செய்திருப்பதற்கு பதில், இரண்டாவது பூஸ்டர் டோஸ், மூன்றாவது பூஸ்டர் டோஸ் போட்டு உபயோகப்படுத்தி இருக்கலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் மூன்று டோஸ் போட்டு மக்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொள்கிறது அரசு. இங்கு முதல் பூஸ்டர் டோஸுடன் நிறுத்திக்கொண்டுவிட்டார்கள். அதுவும் முழுமையாக எல்லோருக்கும் போடவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
ராகுல் ஸ்டாலின் கேட்டபடி அன்னிய தடுப்பூசிகளை வாங்க முயற்சி செய்திருந்தால் இந்தியாவே😪 திவாலாகியிருக்கும் ..பெரும்பான்மை யான நாடுகளால் அவற்றை வாங்கவே இயலவில்லை. MNC கம்பெனிகள் INDEMNITY யாக மொத்த நாட்டையும் அடைமானமாக கேட்டன. மோடி உள்நாட்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கு அளித்த ஊக்கம்தான் நாட்டையும் பொருளாதாரத்தையும் காப்பாற்றியது.
மோடி உள்நாட்டு நிறுவனங்களுக்கு அளித்த ஊக்கம்தான் நாட்டையும் பொருளாதாரத்தையும் காப்பாற்றியது.
லாபத்தில் நட்டம் .