ADVERTISEMENT
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், கேதர்நாத் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு நடத்தினார். கோயிலுக்கு பாரம்பரிய ஆடையையும் வழங்கினார்.


கோயிலுக்கு வந்த மோடி, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் பாரம்பரிய உடையான 'சோழா டோரா' அணிந்திருந்தார். மோடி, இதற்கு முன்னர் ஹிமாச்சல பிரதேசத்திற்கு வந்த போது, சம்பா மாவட்டத்தை சேர்ந்த பெண் பரிசாக வழங்கியதாக தெரிகிறது.

கேதர்நாத் கோயிலுக்கு மோடியுடன் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி உடன் வந்தார்.

கேதர்நாத் ரோப்கார் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய மோடி, தொடர்ந்து, ஆதிகுரு சங்கராச்சாரியார் சமாதிக்கும் சென்றார். தொடர்ந்து, கோயில் பகுதியில் நடக்கும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார்.

கவுரிகுண்ட் முதல் கேதர்நாத் வரையிலான 9.7 கி.மீ., தூரத்திற்கு ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால், இரு பகுதிகளுக்கு இடையிலான பயண தூரம் 6 முதல் 7 மணி நேரம் ஆகும் நிலையில், ரோப்கார் பயணம் மூலம் வெறும் அரை மணிநேரம் மட்டுமே ஆகும். இந்த பயணத்தின் போது, ரூ.3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

இங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு பத்ரிநாத் செல்லும் மோடி, அங்கு வழிபாடு நடத்துவதுடன் பூஜை செய்ய உள்ளார். அங்குள்ள நதிக்கரையில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செயது, மணா கிராமத்தில் சாலை மற்றும் ரோப்வே திட்டத்திற்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.

வாசகர் கருத்து (17)
இந்தியர்கள் - குறிப்பாக ஹிந்துக்கள் - அதிலும் தமிழர்கள் பெருமைப்பட கூடிய விஷயம் - நமது பிரதமர் மோதி அவர்கள் தான். இன்னும் பத்து வருடங்களில் தமிழகத்தில் பிஜேபி தலைமையில் ஆட்சி அமையப்போவது உறுதி.
ஒவ்வொரு பண்டிகையையும் தன வீட்டோடு மட்டும் கொண்டாடாமல் - இந்தியாவையே தனது குடும்பமாக மதிக்கும் மோதி அவர்கள் தீபாவளி பண்டிகையை - உறவினரிடம் இருந்து பிரிந்து வாழும் ராணுவத்தினர் கூட - கொண்டாடுகிறார். இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயம் இது.
பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டுகள் மோடியின் புகழ் வாழ்க தெய்வத்தின் தெய்வமாக விளங்குறார் மோடி.
,,,,,
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
எல்லோரையும் போல் கியூவில் நின்னுப் போனா தெரியும். சிவன் ஆசி கிடைச்சுரும்.