Load Image
Advertisement

எம்.ஜி.ஆர்., தோட்டத்தில் சசிகலா கார் சிறைபிடிப்பு

Tamil News
ADVERTISEMENT
சென்னை ராமாவரம் தோட்டத்தில் சசிகலா காரை எம்.ஜி.ஆர். பேரன் சிறைப்பிடித்து வைத்தார். அவரிடம் பன்னீர்செல்வம் ஆதரவாளர் பஞ்சாயத்து நடத்திய பின் அந்த கார் விடுவிக்கப்பட்ட சம்பவம் சசிகலாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அ.தி.மு.க.வின் 51வது ஆண்டு விழாவை ஒட்டி சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு தன் ஆதரவாளர்களுடன் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் சசிகலா ஏற்பாட்டில் 2000 பேருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

அப்போது எம்.ஜி.ஆர். பேரன் ராமச்சந்திரன் தனக்கு 10 பிரியாணி பொட்டலங்கள் தருமாறு கேட்டுள்ளார். பிரியாணி கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக அவருக்கும் சசிகலா தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. பின் இரு தரப்பினரையும் சிலர் சமரசப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் வாய் பேச முடியாதோர் பள்ளியில் படிக்கும் 250 குழந்தைகளுக்கு தீபாவளி இனிப்பும் பட்டாசும் வழங்கி வரும்படி சசிகலா தன் கார் டிரைவரையும் பாதுகாவலரையும் அனுப்பி வைத்துள்ளார்.

Latest Tamil News
அவர்கள் இருவரும் சசிகலா காரில் ராமாவரம் தோட்டத்திற்கு வந்து பள்ளி குழந்தைகளிடம் இனிப்பும் பட்டாசும் வழங்கி விட்டு காரை எடுக்க முயன்றனர்.

அப்போது அங்கு வந்த எம்.ஜி.ஆரின் பேரன் கார் சாவியை பறித்து கொண்டு 'யாரிடம் கேட்டு நீங்கள் உள்ளே வந்தீர்கள்?' என கேட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதும் கார் டிரைவர் சரமாரியாக தாக்கப்பட்டார்.

பின் இரவு 10:00 மணி வரை சசிகலாவின் கார் சிறைப்பிடித்து வைக்கப்பட்டது. இந்த தகவல் பெங்களூர் புகழேந்திக்கு தெரியவந்ததும் அவர் எம்.ஜி.ஆர். பேரனிடம் பஞ்சாயத்து நடத்தினார். அதன் பின் சசிகலாவின் கார் செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.- நமது நிருபர் -


வாசகர் கருத்து (16)

 • Tamilnesan - Muscat,ஓமன்

  உழைக்கும் மக்களிடம் ஒரு லட்ச ரூபாய் இருந்தால் ஆயிரம் கேள்விகள் கேட்கும் கேடு கெட்ட வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற சசிகலாவுக்கு எப்படி இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்க ..........அல்லது கட்டிங் பெற்றுக்கொண்டு வாயை மூடி விட்டார்களா...இந்த அவலங்களை நீதிமன்றங்கள் எவ்வளவு நாட்கள் வேடிக்கை பார்க்கபோகிறது

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  அட ராமச்சந்திரா ,இது என்ன கூத்து ? இந்த சசிகலா எந்த கம்பெனியில் வேலை பார்த்தார் ,இப்படி காசு கொட்ட?

 • Tamilnesan - Muscat,ஓமன்

  இந்தியாவில் தான் இது போன்ற அவலங்கள் நடக்கும். உச்ச நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர் தமிழக மக்களை காக்க வந்தவர் போல நடிக்கிறார்.

 • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

  பிரியாணி ...பிரி ஆணியாக மாறி விட்டதோ ?

 • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

  சிலபல புண்ணியங்கள் செய்த எம்சிஆரு குடும்பமே இப்படி நாறுது என்றால் ஒன்லி பாவங்கள் மற்றும் மகா பாவங்களை குடும்ப, வாழ்க்கை கொழுகையாக கடந்த நன்கு தலைமுறைகளாக செய்து வரும் வந்தேறி தெலுங்கு திராவிடியா குடும்பம் எப்படி சீரழிய போகிறது என்பதை வரும்காலம், மக்கள் கண்டு உணரும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்