Load Image
Advertisement

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா

 பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா
ADVERTISEMENT
லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ்டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் முயற்சியில் ஆளும் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகினார். ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக முடியும். இதன்படி கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் போட்டியிட்டனர்.

Latest Tamil News
இதன்படி கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார். நடப்பு பட்ஜெட்டில் பல்வேறு வரிச் சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் பொருளாதார ஆலோசனை சரியாக வழங்காத நிதி அமைச்சர் கவாசி கவார்தெங்கை நீக்கினார். புதிய நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட்டை நியமித்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் லிஸ்டிரஸ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த இ சுயெல்லா பிரேவர்மேன் என்பவர் திடீரென நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.


இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று பிரதமர் லிஸ்டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு எதிராக அவருடைய கட்சியில் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. அவருடைய மோசமான கொள்கைகளே, நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளதாக அவருடைய கட்சி எம்.பி.,க்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதையடுத்து 45 நாட்களே ஆன நிலையில் லிஸ்டிரஸின் பிரதமர் பதவி நிறைவடைந்தது. இன்று பதவி விலகினார். இதற்கிடையே, ரிஷி சுனாக்கை பிரதமராக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் வரை தான் பதவியில் இருப்பேன் என பேட்டியளித்துள்ளார்.


வாசகர் கருத்து (31)

  • பேசும் தமிழன் -

    தேவையில்லாத இடத்தில் கொண்டு போய் பணத்தை..... அதாங்க.... உக்ரைன்.... பணத்தை கொட்டினால்.... பொருளாதாரம் சீரழியாமல் என்ன செய்யும்???

  • Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ

    44 நாள் பிரதமரா இருந்த இந்த அம்மணிக்கு வாழ்நாள் முழுக்க 15000 பவுண்ட் மாச பென்சன் கிடைக்கும்

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    ரிஷியை பிரதமர் ஆக்கினாள் என்று கருத்து எழுதும் வாசகர்களே, இங்கிலாந்த் இனி சீனாவை ஆதரிக்கும் வரை அங்கே ஸ்திர நிலை இருக்க போவதில்லை என்பது எனது கருத்து

  • gilbert - vienna,ஆஸ்திரியா

    போரிஸ் தான் பெட்டர். நம்மூர்காரர் வந்தா இன்னொரு போர்ஜரிவால் 'ஆகத்தானிருப்பாரென்பது என் கணிப்பு

  • kulandai kannan -

    ஜான்சனுக்கும் வாய்ப்பு உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்