ஓசூரில் கனமழை கொட்டி தீர்த்தது: இரு எரிகள் உடைப்பு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மழையின் அளவு 72 மில்லி மீட்டர் ஆக பதிவானது.
பாதிப்புகள்:
ஓசூர் மாநகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட கே.சி.சி நகர் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்து மாடிகளில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். மேலும் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத அளவிற்கு மக்கள் தவித்தனர். ஏரி கரையில் இருந்த 5 க்கும் மேற்பட்ட மண் வீடுகள் சேதம் அடைந்தன.
இரு ஏரிகள் உடைப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே கூட்டூர் கிராமத்தில் உள்ள ராயலாச்சாரி ஏரி நிரம்பி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனால் அதற்கு கீழ் பகுதியில் உள்ள எச் செட்டி பள்ளி ஏரி கரை உடைந்து தண்ணீர் வெளியேறி விவசாய நிலங்களில் தேங்கியது.
கூட்டூர் மற்றும் எச் செட்டி பள்ளி ஏரிகள் நிரம்பினால், கெலமங்கலம் கொடுகை நஞ்சப்பன் ஏரிக்கு தண்ணீர் சென்று அங்கிருந்து சனத்குமார் ஆற்றுக்கு தண்ணீர் செல்லும். ஆனால் ஏரிகள் உடைந்ததால் விவசாயத்திற்கும் மக்களுக்கும் பயன்படாமல் தண்ணீர் வீணானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வு:
ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, துணைமேயர் ஆனந்தய்யா மற்றும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மாநகராட்சியினர் உடனடியாக மீட்பு பணிகளை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டார். தீயணைப்புத் துறையினர் வெள்ளத்தில் யாராவது சிக்கி உள்ளார்களா அல்லது வீடுகளில் யாரும் சிக்கிருக்கிறார்களா என்பதை படகு மூலமாக சென்று பார்வையிட்டனர்.
.ஓசூர் மாநகரகராட்சி மேயர் சத்யா நிருபர்களிடம் கூறுகையில், ராஜ கால்வாயில் ஆக்கிரமிப்பு காரணமாக தான் கே.சி.சி நகர் பகுதிக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்றார்.
பெங்களூர் தான் காரணம், அங்கே பெய்த மழையை ஓசூருக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள்.