ADVERTISEMENT
சென்னை : ''பொது இடங்களை ஆக்கிரமிப்பது ஒரு வியாதி. இது மக்கள் மத்தியில் வளரக் கூடாது. நீர்நிலை ஆக்ரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது,'' என, அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - அய்யப்பன்: உசிலம்பட்டி தொகுதியில் உள்ள, 58 கிராம கால்வாயை, சிமென்ட் கால்வாயாக கட்டித் தர வேண்டும்.

துணை சபாநாயகர் பிச்சாண்டி: பெரும்பாலான ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின், ஏரிகளுக்கு வேலி அமைத்தால், மீண்டும் ஆக்கிரமிப்பு வராமல் இருக்கும். வீடுகள் இடிக்கப்படும் சூழல் உள்ளது; அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா? ஏரிகளை துார் வாரும்போது, ஏரி குறித்த விபரங்களை அறிய, அளவீட்டு கருவி அமைக்கப்படுமா?
துரைமுருகன்: ஏரிகளை துார் வாரவே படாதபாடு பட வேண்டி உள்ளது. வேலி அமைக்க நிதிக்கு எங்கு செல்வது? ஏரிகளை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். அதை இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை நிறைவேற்றுவதா; பிச்சாண்டி கோரிக்கையை நிறைவேற்றுவதா என்று எனக்கு தெரியவில்லை.
பொது இடங்களை ஆக்கிரமிப்பது என்பது ஒரு வியாதி. இது மக்கள் மத்தியில் வளரக் கூடாது. குறிப்பாக, நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. இவ்வாறு விவாதம் நடந்தது.
வாசகர் கருத்து (44)
முதல்ல அரசியில் வியாதிகள், கைப்பற்றியுள்ளதாக, பேசப்படும் பொது இடங்களை பரிசோதித்து,விடுவியுங்கள்,சார்.
மக்கள் பணத்தை திருடி தானே நீங்கள் எல்லோரும் சொத்து குவித்து வைத்து உள்ளீர்கள். அப்போ உங்களுக்கும் உங்கள் தலைவருக்கும் கூட அந்த வியாதி இருக்கிறது தானே தலைவா?
ஆக்கிரமிப்பு செய்த பொது இடங்களுக்கு மின் இணைப்பு கொடுத்த அதிகாரிகள் ஊழியர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, நான்கு லட்சம் ரூபாய் அபராதம் வழங்கினால் இது போன்ற குற்றங்கள் குறையும்.
பொது இடங்களை ஆக்கிரமிப்பது ஒரு வியாதியாம். அதை எதுக்குங்க பூடகமா சொல்லுணும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மணல் அள்ளுபவர்களிடம் கையேந்துவதும் ஒரு வியாதிதான் சாமி.