துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பழனிசாமி பொறுப்பு: சட்டசபையில் முதல்வர் பேச்சு
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டசபையில் விதி 110 கீழ் அறிக்கை வெளியிட்டு, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மாநில ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, கவர்னர் உரையில் 77 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. நிதிநிலை அறிக்கையில், 255 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சட்டசபை விதி 110ன் கீழ் 60 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன. 2,607 அறிவிப்புகள் வெ ளியிடப்பட்டு, அதில் 791 அறிவிப்புகள் முடிவுற்றுள்ளன என்றார்.
சென்னை சாலை மேம்படுத்தப்படும்:
சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பல்வேறு நிதியை ஒருங்கிணைத்து ரூ.7,388 கோ டியில் 16,390 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் ரூ.2,200 கோடி மதீப்பிட்டில் 4,600 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். உலக வங்கி நிதியுடன் ரூ.500 கோடியில் 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு:
கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடியில் ஆயிரம் புதிய வகுப்பறைகள் க்டடப்படும். அதேபோல், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.250 கோடியில், 1,200 வகுப்பறைகள் கட்டப்படும்.
இதையடுத்து, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்து, தனித் தீர்மானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும். மேலும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும்.
தூத்துக்குடி சம்பவம்- கூடுதல் நிவாரணம்
தூத்துக்குடி சம்பவம் காரணமாக தான் மக்கள் தேர்தலில் அதிமுகவுக்கு தண்டனை வழங்கினர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். ஏற்கனவே உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
துறை ரீதியான நடவடிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தின், அப்போதைய கலெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை பொதுத்துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினை சேர்ந்த மூன்று வருவாய் துறை அதிகாரிகள் மீது, துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்.
அருணா ஜெகதீசன் ஆணையம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் அமைதி வழியில் நடைபெற்று வந்தது. ஊர்வலமாக வந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தூத்துக்குடி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்துள்ளது.
தெரிந்தும், தெரியாமல் இருப்பவர் பழனிசாமி:
எடப்பாடி பழனிசாமி எதேச்சதிகாரத்திற்கு, தூத்துக்குடி சம்பவம் எடுத்துக்காட்டு. பழனிசாமி ஆட்சியில் அமைத்த ஆணையம் தான் உண்மைகளை
வெளிகொண்டு வந்துள்ளது. அவர், தனது அறையில் அமர்ந்து நேரடி வர்ணனைகளை கேட்டுவிட்டு எதுவும் தெரியாது என்று சொன்னவர் ஆவர். இவ்வாறு அவர் பேசினார்.
பரந்தூர் விமான நிலையம் அவசியமானது: அமைச்சர் தங்கம் தென்னரசு
சட்டசபை பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: பரந்தூர் விமான நிலையம் அவசியமானது. விமான நிலையம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
பல அமைப்பு, தொழில் நுட்ப காரணங்களை கருத்தில் கொண்டே பரந்தூர் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது உள்ள சென்னை விமான நிலையம் அவசியம் என்றார்.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் மழை கொட்டுகிறது: துரைமுருகன்
கொஞ்சம் நாள் மழையே பெய்யவில்லை. வெள்ளம் வரவில்லை. கரை உடையவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு மழையோ மழை என பெய்து வெள்ளம் ஓடி வருகிறது. ஒரே நேரத்தில் பல இடங்களில் இதெல்லாம் நடைபெறுவதால் எவை முக்கியமானதோ அதை உடனடியாக செய்து தருவோம்.
பொது இடங்களை ஆக்கிரமிப்பது ஒரு வியாதி. மக்கள் மத்தியில் அதனை வளர விடக்கூடாது. ஏரி மற்றும் குளங்களை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டினால் அதை அரசு அகற்றும் என்றார்.
வாசகர் கருத்து (29)
அப்படியே அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை, 2G ராஜா டிரைவர் சாதிக்பாட்சா தற்கொலையையும் விஜாரிக்கனும். உங்க கிளை கட்சி தலைவர் வைகோவிடம் ஆதாராம் உள்ளது என்று கூறினார் .....
இரண்டாவது தவணையாக கொடுக்கப்போகும் 65 லட்சத்தை வேறு ஏதாவது குடும்ப நிலத்திட்டத்திற்காக பயன்படுத்தலாமே (லண்டன்,துபாய் திட்டம் மாதிரி).
0 ..........
அது உண்மையானால், அதற்காகவே பழனிசாமிக்கு மீண்டும் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
உதயகுமாரை போலீஸ் கஷ்டடியில் அடித்து கொன்றதற்கு யார் காரணம்?