அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலராக தேர்வான பழனிசாமி, சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் பன்னீர்செல்வத்துக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர் உதயகுமாரை நியமிக்கும்படி, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். அவர் ஏற்கவில்லை. இதை கண்டித்து, சட்டசபையில் நேற்று (அக்.,18), கேள்வி நேரத்தில் பேச முயன்றனர். சபாநாயகர் அனுமதி அளிக்காததால், அவரது இருக்கை முன் அமர்ந்து தர்ணா செய்தனர். இதனால் சபைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் தடையை மீறி பழனிசாமி உள்ளிட்ட 62 அதிமுக எம்எல்ஏ.,க்கள் கருப்பு சட்டை அணிந்து வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அப்போது போலீசார் அனுமதி மறுத்ததால், சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிட்டு கலையுமாறு போலீசார் அறிவுறுத்தியும் கலையாததால், பழனிசாமி உள்ளிட்ட 62 எம்எல்ஏ.,க்களையும் போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாலை 4: 40 மணியளவில், பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து (22)
கண்டி பேரன்களின் உண்ணா விரதமாச்ச்சே. அதனால உடனே விடுதலை.
மோடி, அதிமுகவின் இரும்பு கரத்தில் ஒரு பகுதியாவது ஸ்டாலினிடம் இருக்காதா?. தெரிந்திருந்தும் ஸ்டண்டு அடிக்க சென்றுள்ளனர். தன சொந்த பிரச்சினைகளுக்காக சட்டட்ச்சபை நேரத்தை வீணாக்க முற்பட்டுள்ளனர் .
ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள் என்.எஸ்.ஜி பாதுகாப்புப் படையினர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, P.P. 27 (Protected Person) என்று அழைப்பார்கள். அதாவது, என்.எஸ்.ஜி.-யால் பாதுகாக்கப்படும் 27-வது வி.வி.ஐ.வி- என்பது அதன் பொருள். குறிப்பிடுவார்கள். N.S.G. எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையான கருப்புப் பூனைப்படை 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன் பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்தும், அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டும் இதுபோன்றதொரு சிறப்புப் படையை உருவாக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்தது. இவர்களின் பணி, ரெகுலர் போலீசாரோ, துணை ராணுவப் படையோ, ராணுவமோ செய்யும் பணிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. பயங்கரவாதத் தாக்குதலை எத்தகைய நிலையிலும் முறியடிப்பதே இவர்களின் முக்கியப்பணி. மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போது கூட இவர்கள்தான் களமிறங்கி பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி, வீழ்த்தினர். ஒரு குறிப்பிட்ட இடத்தை பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து விட்டால், இவர்கள் அங்கே களமிறக்கப்படுவார்கள். பின்னர் கனகச்சிதமாக இவர்கள், காரியத்தை முடிப்பார்கள். அதில் இவர்கள் வல்லவர்கள். இந்தப் பணி தவிர, இவர்களில் 515 வீரர்களுக்கு மற்றொரு முக்கியப் பணியும் அளிக்கப்பட்டது. அதாவது கொலை மிரட்டல், தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள வி.வி.ஐ.பி-க்களுக்கு பாதுகாப்பு அளிப்பது. இவர்கள் அளிக்கும் பாதுகாப்புக்கு Z-பிளஸ் பாதுகாப்பு என்று பெயர். பொதுவாக, வி.ஐ.பி-க்கள், வி.வி.ஐ.பி-க்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பானது Y, Y-பிளஸ், X, X-பிளஸ், Z, Z-பிளஸ் என வகைப்படுத்தப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர், முக்கிய அரசியல் பிரபலங்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என்ற ரேங்கில் உள்ளவர்களுக்கு ஒய் மற்றும் ஒய் பிளஸ் பிரிவில் உள்ளவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஆகியோருக்கு Z- பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தக் கருப்புப்பூனைப் படையினர் அனைவரும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். இந்தியாவிலேயே மொத்தம் 16 வி.வி.ஐ.பி-க்களுக்கு மட்டுமே, என்எஸ்ஜி படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியும் இசட் பிளஸ் பாதுகாப்புக்கு உரியவர்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின், தற்போது கருணாநிதிக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது ஒரு வி.வி.ஐ.பி-க்கு 40 என்.எஸ்.ஜி வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஷிப்ட் அடிப்படையில் செயல்படும் இவர்களில் ஒரு ஷிப்டில் ஒருகுழு பாதுப்புப் பணியில் ஈடுபடும். அந்தக் குழுவில் ஐந்து ரேஞ்சர்கள் இருப்பார்கள் ஒரு உதவி ஆணையர் ரேங்க்கில் உள்ளவர் தலைமை தாங்குவார். கைகளில் எந்திரத் துப்பாக்கியும், ஊடுருவிப் பார்க்கும் கூர்மையான கண்களும், வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பும் மட்டுமே இவர்களின் சொத்து. வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு மட்டுமே இவர்கள் இலக்கு. இவர்கள் பாதுகாக்கும் அந்த வி.வி.ஐ.பி-க்களை P.P. என்று அழைப்பார்கள். Protected Person அதாவது பாதுகாக்கப்பட்ட மனிதர் என்பது அதன் அர்த்தம். அந்த வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, P.P 27 என்று அழைக்கப்பட்டார்.
ஒருவர் Z+ பாதுகாப்பில் உள்ளார். அதுவும் ஒரு மாநில முதல்வர். அவர் மயக்கம் அடைந்த நிலையில் பாதுகாப்பு படை என்ன செய்தது. மருத்துவமனையில் எங்கே இருந்தது. அவர்கள் ஏன் விசாரணை வளையத்துக்குள் வரவில்லை. அடுத்து கவர்னர். ஒரு முதல்வர் செயல் இழந்த போது இவரது நடவடிக்கை என்ன? ஏன் மௌனமாக மும்பையில் இருந்தார். அடுத்து அமைச்சர்கள். அவர்கள் ஏன் மௌனம் காத்தனர்? எனவே தமிழக அரசு இவர்களையும் அந்த எட்டு பேருடன் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணை செய்ய வேண்டும். நீதி பரிபாலனம் காணப்படவேண்டும்.
செய்திக்கு சம்பந்தமில்லா கருத்துக்கள் அதிகம்