Load Image
Advertisement

பசும்பொன் தேவர் தங்க கவசம் விவகாரம்; நீதிமன்றம் செல்கிறது பழனிசாமி தரப்பு

 பசும்பொன் தேவர் தங்க கவசம் விவகாரம்; நீதிமன்றம் செல்கிறது பழனிசாமி தரப்பு
ADVERTISEMENT
மதுரை : பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தங்களிடம் தான் தங்க கவசத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாட, முன்னாள் முதல்வர் பழனிசாமி தரப்பினர் முடிவு செய்து உள்ளனர்.

தேவர் ஜெயந்தி வரும் 30ல் நடப்பதை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில் பசும்பொன் நினைவிடத்தில் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். இதற்காக ஜெயலலிதா 2014ல், 13 கிலோ தங்க கவசத்தை வழங்கினார். மதுரை அண்ணாநகரிலுள்ள வங்கியில் இந்த கவசம் பாதுகாக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் கட்சியின் பொருளாளரும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாளும் கையெழுத்திட்டு கவசத்தை பெற வேண்டும். தற்போது பழனிசாமியும், பன்னீர்செல்வமும், எதிரும், புதிருமாக இருப்பதால் இருதரப்பும் தங்களிடம் தான் கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என, வங்கி நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

Latest Tamil News
ஆனால் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாளோ 'இருவரிடமும் கொடுக்க வேண்டாம். என்னிடம் கொடுங்கள் என கேட்க போகிறேன்' என கூறி வருகிறார். இந்நிலையில், ரிசர்வ் வங்கி விதிப்படி தற்போதைக்கு அ.தி.மு.க., பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் கருதப்படுகிறார். அ.தி.மு.க., வரவு செலவுகளை நிர்வகிக்கும் வங்கியும் இதை ஏற்றுக் கொண்டுள்ளது.

இதை அடிப்படையாக வைத்து தங்களிடம் தான் கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாட பழனிசாமி தரப்பு முடிவு செய்து உள்ளது. நிர்வாகிகள் கூறுகையில், 'பன்னீர்செல்வம் தரப்பும் வழக்கு தொடரும் பட்சத்தில் 2017ல் சசிகலா குடும்பத்தினரால், கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தின்போது மதுரை, ராமநாதபுரம் கலெக்டரிடம் கவசத்தை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 'அதன்படி இம்முறையும் ஒப்படைக்க உத்தரவிட்டாலும் ஆச்சரியமில்லை' என்றனர்.


வாசகர் கருத்து (6)

  • sankar - சென்னை,இந்தியா

    வீண் வம்பு தான் வரும்.

  • அப்புசாமி -

    பிரதமரை வரவழைச்சு அவர் கையில் குடுத்திரலாம்.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    இடையில் புகுந்து விடியல் ஆட்சி ஆட்டையைப் போட வாய்ப்பிருக்கிறது. அதே மாதிரி டூப்ளிகெட்டில் செய்து வைத்து விடுவார்கள்.

  • N SASIKUMAR YADHAV -

    தங்க கவசம் பேசாமல் உச்சநீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கட்டும் இல்லையென்றால் தேவர் அறக்கட்டளை கட்டுப்பாட்டில் இருக்கட்டும்

  • மணி - புதுகை,இந்தியா

    பழனிச்சாமிக்கும் தேவருக்கும் தங்க கவசத்திற்கும் எந்த தொடர்புமில்லை உரிமையுமில்லை. அவர் காலடி புனித தேவர் நினைவிடத்தில் படாமலிருப்பதே தேவருக்கு செய்யும் மரியாதையாகும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்