ADVERTISEMENT
புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி கவர்னரிடமும் பிரச்னை செய்வேன் என செயல்பட்டு வருகிறார். துணைநிலை கவர்னருனா அவருக்கு அலர்ஜி என புதுச்சேரி கவர்னர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங், சிவாஜி பல்கலைக்கழகப் பேராசிரியர் சொங்காவதே ஆகியோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து கவர்னர் தமிழிசை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மக்களுக்காகத்தான் அனைத்து அலுவலகமும். மக்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என கூறுவது தவறானது. நான் மக்களை பார்க்க கூடாது என கூறும் அதிகாரத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு யார் கொடுத்தது? . கவர்னர் அன்போடு மக்களை சந்தித்து குறைகேட்பதில் என்ன தவறு?.

மக்களின் பிரச்சனைகளை தெரிந்துகொண்டு அதை அதிகாரிகளுக்கு சொல்வதற்கு தான் இந்த சந்திப்பு கூட்டமே. அதிகாரிகள் தினமும் மக்களை எளிதில் சந்திக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். இதற்கு முதல்வர் எப்போதும் தடை போட மாட்டார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி அன்று இருந்த கவர்னரிடமும் பிரச்சனை செய்வேன். இன்று உள்ள கவர்னரிடமும் பிரச்சனை செய்வேன் என செயல்பட்டு வருகிறார். மேலும் துணைநிலை கவர்னருனா அவருக்கு அலர்ஜி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (10)
கவர்னர் என்றாலே நாராயணசாமிக்கு ‛அலர்ஜி '. அட நாராயணசாமி பரவாயில்லை. தமிழகத்தில், கவர்னர் வொவொருமுறை டெல்லி செல்லும்போதும், ஒட்டுமொத்த திமுகவினருக்கும் அலர்ஜி... கூடவே loose motion... அந்த கருமத்தை என்னவென்று சொல்வது?
அவரு வேலையில்லாம திரியிறாரு. ராகுலுக்கு மொழிபெயர்ப்பாளர் வேலையும் போச்சு. அப்படிதான் கூவுவார்
யூனியன் பிரதேச கவர்னர் என்றாலே பிரச்னை செய்ய கிளம்பிடறாங்க டெல்லியில் போர்ஜரிவால் பாண்டியில் 15 நாள் நாராவாய் சாமி
இதுவும் வேணும் இதுக்கு மேலும் வேணும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
குடியரசு தலைவர் அனுமதி இல்லாமல் சொந்த மாநிலத்துக்கு வந்து அரசியல் செய்றீங்களாம். தினமலர் பேப்பரில் செய்தி வந்திருக்கிறது. ஓ உங்களை நியமிச்சது ஜனாதிபதி கோவிந்தா? இவரிடம் அனுமதி தேவலைன்னு நினச்சிட்டீங்களா... சரி.. சரி