புதுடில்லி: நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நிறைவுபெற்றது. டில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தற்போதைய காங்., தலைவர் சோனியா, பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் ஓட்டளித்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (அக்.,17) துவங்கியது. சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு காங்., தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், சோனியா மற்றும் ராகுல் மறைமுக ஆதரவை பெற்ற மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதற்காக நாடு முழுவதும் 65 ஓட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுக்குழு உறுப்பினர், எம்.பி., எம்எல்ஏ.,க்கள், மாவட்ட தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் உட்பட சுமார் 9,500 காங்கிரஸ் பிரதிநிதிகள் ஓட்டளித்தனர்.

கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல், பெல்லாரியில் ஓட்டளித்தார். இதற்காக பிரத்யேக ஓட்டுச்சாவடி உருவாக்கப்பட்டது.

டில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தற்போதைய காங்., தலைவர் சோனியா, பொதுச்செயலர் பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் ஓட்டளித்தனர். மல்லிகார்ஜூனா கார்கே, பெங்களூரில் ஓட்டளித்தார்.

ஓட்டுப்பதிவுக்கு பின்னர் சோனியா கூறுகையில், 'இந்த தேர்தலுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன்' என்றார். ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் (அக்.,19) எண்ணப்பட்டு, அடுத்த காங்., தலைவர் யார் என அறிவிக்கப்பட உள்ளது.

ஓட்டுப்பதிவுக்கு முன்பாக மல்லிகார்ஜூனா கார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இது உட்கட்சி தேர்தலின் ஒரு பகுதி. போட்டியாளர்களான நானும், சசி தரூரும் தேர்தல் முடிவு எதுவானாலும் இருவரும் ஒன்றாக இணைந்து கட்சியை கட்டியெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டோம். சசி தரூர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார். நானும் அவரை வாழ்த்தினேன்,' என்றார்.

சசிதரூர் கூறுகையில், 'தேர்தலில் வெற்றிப்பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவிதி கட்சி தொண்டர்களின் கையில் உள்ளது. காங்கிரஸின் மறுமலர்ச்சி தொடங்கியுள்ளதாக நான் நம்புகிறேன். இன்று நான் கார்கேவிடம் பேசினேன், என்ன நடந்தாலும், நாம் சக தொண்டராகவும், நண்பர்களாகவும் இருப்போம் எனக் கூறிக்கொண்டோம்' என்றார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தும் அதிகாரியான மதுசூதன் மிஸ்திரி கூறுகையில், '9,500 பிரதிநிதிகள் இன்று ஓட்டளித்தனர். மொத்தத்தில், 96 சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது. அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் 87 பேர் ஓட்டளித்தனர்' என்றார்.
வாசகர் கருத்து (19)
ஐயோ ஐயோ ஐயோ சோனியா பிரியங்கா ராகுல் இத்தாலியக்காரர்கள் இந்தியாவில் வோட்டு போட்டார்களா? பரவாயில்லையே? இதெல்லாம் ஒரு செய்தி? இது செய்தியல்ல ஒரு வியாபார விளம்பரம்? நம்ம ஸ்டாலின் ஆய்வு போல டிவியில் தினம் தினம் காட்டுகின்றார்களே காலையில் அது போலத்தான் இதுவும்???
சசிதரூர் மச்சக்காரர் .....
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமையானவர்கள், வாய் தான் நீளம்.
இந்த காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் தான் உட்கட்சி தேர்தலில் ஜனநாயகத்தை கடைப்பிடிப்பது எப்படி என உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.........
எப்படியும் இத்தாலி சொம்பு தான் வர போகிறார்...... இதுக்கு எதுக்கு இந்த பில்டப்???