Load Image
Advertisement

அழகிரியை அசைக்க முடியாது

புதுடில்லி: காங்கிரசின் தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்க நாளை தேர்தல் நடைபெற உள்ளது. காங்., மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும், லோக்சபா எம்.பி., சசி தரூரும் போட்டியிடுகின்றனர். காங்., இடைக்கால தலைவர் சோனியா, ராகுல் ஆசி பெற்ற கார்கே தான் தலைவர் என்பது அனைவருக்குமே தெரியும்.
சோனியா குடும்பத்தினர் சொல்வதைத்தான் கேட்பேன் என கார்கேயும் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.


Latest Tamil News


இந்நிலையில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி குறித்து கார்கேயுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இங்குள்ள தலைவர்கள் பலர் அழகிரியை மாற்ற வேண்டும் என விரும்பினாலும், ராகுலுக்கு இதில் விருப்பம் இல்லையாம்.



Latest Tamil News
அழகிரி, தமிழக காங்கிரசை நல்ல முறையில் வழி நடத்துவதோடு, கூட்டணி கட்சிகளையும் அனுசரித்து போகிறார். எனவே, அழகிரியே தமிழக தலைவராக நீடிக்க வேண்டும் என ராகுல், கார்கேக்கு உத்தரவிட்டுள்ளாராம்.


அழகிரியை மாற்ற வேண்டும் என்பதற்காக புதுடில்லியில் முகாமிட்டு, சீனியர் தலைவர்களைச் சந்தித்து வரும் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு மற்றும் லோக்சபா எம்.பி., கார்த்திக்கு இது பெரிய பின்னடைவு தான்.


வாசகர் கருத்து (8)

  • W W - TRZ,இந்தியா

    லுஸ் டாக் , வயாலேயே கெடுவார்

  • vbs manian - hyderabad,இந்தியா

    ஒரு வெளிநாட்டவர் என்னமாய் கட்சியை தன் கைப்பாவையாக்கி வைத்திருக்கிறார். அசல் இந்தியர்கள் அவர் முன் கை கட்டி வாய் பொத்தி நிற்கின்றனர்.

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    இவர் ஒரு காமெடி பீஸ் இவர் உள்ளவரை திமுகவின் அடிமையாக இருப்பார். காங்கிரஸ் வளரவே வளராது. பாஜகவிற்கு நல்லது.

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    எந்த கட்சியின் அழகிரியையும் மாற்றினாலும் மாற்றலாம் இந்த அழுக்கு கிரியை மாற்றாவே முடியாது அதுதான் காங்கிரசின் பலவீனம்

  • jayvee - chennai,இந்தியா

    அழுக்குகிரியை ஒன்றும் செய்யமுடியாது..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்