Load Image
Advertisement

உலக பசி குறியீடு : 107 வது இடத்தில் இந்தியா

 உலக பசி குறியீடு : 107 வது இடத்தில் இந்தியா
ADVERTISEMENT
புதுடில்லி: நடப்பாண்டுக்கான உலகப் பசி குறியீட்டு பட்டியலில் இந்தியா 107 வது இடத்தை பிடித்துள்ளது.


@1brசர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பசிக் குறியீடு(Global Hunger Index - GHI) வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தை சேர்ந்த கன்சரன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்பே என்ற நிறுவனமும் இந்த பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பாண்டிற்கான உலக பசி குறியீட்டு பட்டியல் நேற்று வெளியானது.

121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் இந்தியா 107 வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 101வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் 99வது இடத்திலும், இலங்கை 64வது இடத்திலும், வங்கதேசம் 84வது இடத்திலும் நேபாளம் 81வது இடத்திலும், மியான்மர் 71வது இடத்திலும் உள்ளன.
Latest Tamil News

இந்த பட்டியலில் சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் 5க்கும் கீழ் சர்வதேச பசி குறியீட்டு மதிப்பெண் பெற்று பசி இல்லாத நாடாக முன்னணியில் உள்ளன.


வாசகர் கருத்து (21)

 • veeramani - karaikudi,இந்தியா

  இந்திய அரசு இந்த செய்தியையும் நிராகரித்துள்ளது. எனது கேள்வி ஒன்று? செய்தி, தரவுகள் சேகரித்தவர்களுக்கு எவர் தரவுகள் கொடுத்தது. அரசாங்கம் இல்லை என சொல்லிவிட்டது. அப்படி இருக்கையில், மீடியாக்கள் அனைவருக்கும் எவர் செய்தியை பிரசுரிக்க அதிகாரம் கொடுத்தது. இந்திய மீடியாக்கள் இந்தியாவின் செய்தியை மட்டும் பிரசுரம் செய்யுங்கள். உங்களது பேப்பரை இந்திய மக்கள் தான் வாங்கவேண்டும்

 • ஆரூர் ரங் -

  மதமாற்றதுக்கு அதிகம் நிதி அளித்துக் கொண்டிருந்த ஜெர்மனி அப்படித்தான்😛 கூறும். இப்போ என்ஜிஓ க்களுக்கு மோதி ஆப்பு வைத்து விட்டதால் ஆத்திரத்தில் இதுபோன்ற பொய் மூட்டையை அவிழ்த்துவிடுகிறது.

 • rAstha - Chennai,இந்தியா

  இந்தியாவிடம் இனாமும் கடனும் வாங்கி பொருளாதாரத்தை நடத்தும் ஸ்ரீலங்கா, நேபாள், பங்களாதேஷ், யாரிடமும் கையேந்தினாலும் கடன் கிடைக்காத பாகிஸ்தான், போரினால் சீரழிந்த உக்ரைன், வாழ்க்கை நடத்தவே திண்டாடும் வெனின்சுலா இவையெல்லாம் பட்டினி தரவரிசையில், இந்தியாவைவிட முன்னிடத்தில் உள்ளனராம். இதையெல்லாம் நம்புனாத்தான் சோறு கிடைக்குன்னு சர்வேக்கு பதில் கூறிய நபர்களின் மிரட்டி சர்வேயை எடுத்திருப்பார்களோ?

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  இது ஒரு மேற்கத்திய நாடுகளில் பிச்சை எடுக்கும் பல உலக பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன, அவைகள் உலக அளவில் நிதி பிச்சை எடுக்க இதை பயன்படுத்தவே இந்த வகை படுத்தல். பிச்சை எடுப்பவர்கள் வேண்டுமானால் அதிகம் இருக்கலாம் அவர்கள் சோம்பேறிகள்.. அதாவது இந்தியாவில் நூற்றி நாற்பது கோடி மக்கள் பட்டினியால் வாடுகிறனர் எனவே நிதி உதவி அளிக்க வேண்டும் என கோரவே, இதனை நம்பி வளர்ந்த பல உல நாடுகள் நிதி அளிப்பார்கள் அதற்காக தான் .. உண்மை என்ன வென்றால் பசி பட்டினி என்பது இந்தியாவில் இருக்கவே முடியாது அப்படி இருந்தாலும் மிக கூறைவாக தான் இருக்க முடியும் . காரணம் ஏன்ன வென்றால் உணவின் விலை மிக குறைந்த நாடு இந்தியா அரிசி, கோதுமை மிக குறைந்த விலையில் ஏன் 1 ரூபாய் தமிழகத்தில் ரேஷனில் அதாவது மாதம் அதிக பட்சம் 100 ரூபாய் ஒரு குடும்பத்திற்க்கே ஆகும் செலவு இது ஒரு டாலர் அளவே அல்லது) அல்லது பிற மானிலங்க்களில் ஏழைகளுக்கு அரசே இலவசமாகவும் வினியோகிக்கிறது எனவே பட்டினி நிலை யில் இருப்பவர்கள் அதன பெற்று உணவு பிரச்சன இலாமல் பார்த்துக்கொள்வர். பட்டினியாக தினமும் குழந்தைகளை தூங்க கூட விட மாட்டார்கள் எனவே இது ஒரு புரளிதான். இதனை வைத்து எந்த மாநில கட்சியும் அரசியல் கூட செய்ய முடியாது காரணம் இந்த அரிசி கோதுமை இலவசமாக மத்திய அரசு வழங்கினாலும் வினியோகிப்பது மாநில அரசின் கடமை எனவே நூற்றி நாற்பது கோடி மக்களும் பசி இல்லாமல் வாழ மாநில அர்சு தான் பொறுப்பு பிச்சை எடுப்பவர்கள் வேண்டுமானால் அதிகம் இருக்கலாம் அவர்கள் சோம்பேறிகள்..

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  ஜெர்மனியை சேர்ந்த நிறுவனமா ? அப்போ நம்பிட வேண்டியது தான் ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement