இவை சில மாதங்களில் செயல்பட்டன. அதன்பின் பழுதாகி பல ஊர்களில் பராமரிக்காமல் காட்சி பொருளாக 'இருக்கு ஆனா இல்லை' என்ற ரீதியில் முடங்கியது.
பெரியகுளம் தென்கரையில் 40, வடகரையில் 24 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன் பதிவுகளை வடகரை ஸ்டேஷனில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணித்தனர். பதிவுகளை 14 நாட்கள் வரை பாதுகாக்கப்படும்.
இதற்காக சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால் செயின் பறிப்பு, இரவில் கடைகள் உடைத்து திருட்டு சம்பவங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர். பல வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றங்கள் குறைந்தன. ஆனால் ஆண்டின் துவக்கத்தில் இருந்த ஒன்றொன்றாக 64 கேமராக்களும் பழுதாகியது. கட்டுப்பாட்டு அறை முடங்கியது. குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.
உடைந்த கேமராக்கள்
இதே போல் கூடலுார் காய்கறி மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், அண்ணா நகர், ரத வீதி, நடுத்தெரு, பள்ளிவாசல் தெருக்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. சில நாட்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்த கேமராக்கள் பராமரிக்கப்படாததால் அனைத்து உடைந்து காட்சி பொருளாகவே உள்ளது.
தேனியில் 250 கேமராக்கள் அமைத்து கண்காணித்தனர். ஒருசில இடங்களில் பாராமரிப்பு இல்லை.தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டுப்பாட்டு அறை செயல்படவில்லை. எஸ்.பி.அலுவலகத்தில் செயல்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பழுதாசன சிசிடிவி கேமாராக்களை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
வாசகர் கருத்து (2)
இதெல்லாம் கண்துடைப்பு,ஒரு குற்றத்தை செய்யவேண்டுமானல் தடயங்கள் இல்லாமல் முன்கூட்டியே அலுவலகத்தில் மின்கசிவால் தீவிபத்து,சம்பவம் நடந்தபோது எதிர்பாரதவிதமாக மூன்றாவதுகண் நுண்ணறிவு வேலைசெய்யவில்லை,இரண்டு சக்கர,மூன்றுசக்கர,நான்கு சக்கரவாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து இதில் எல்லாம் ஜெகஜால கைதேர்ந்த கில்லாடிகளை உருவாக்கிய பகுத்தறிவாதிகள்.
இதுமாதிரி வெளங்காத திட்டங்களுக்கு டெண்டர் விட்டு கடந்த ஆட்சியே காசு வாங்கியாச்சு.