Load Image
Advertisement

பசும்பொன் பற்றி அவதுாறு: ஆர்.எஸ்.எஸ்., கண்டனம்

 பசும்பொன் பற்றி அவதுாறு: ஆர்.எஸ்.எஸ்., கண்டனம்
ADVERTISEMENT
சென்னை : 'ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை, ஆதாரமற்ற தகவல்களை எடுத்து பகிர்வதும், ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறு பரப்புவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது' என, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தமிழக தலைவர் ஆடல் அரசன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:



தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'முரசொலி' நாளிதழ், 'வாட்ஸ் ஆப்'பில் வந்தது எனக் கூறி, 'நம் உயிர் உள்ளவரை, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., நுழையக் கூடாது' என, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கூறியதாக, ஒரு 'மீம்ஸ்' நேற்று வெளியிட்டுள்ளது.
Latest Tamil News

அந்த தகவல் முற்றிலும், ஆதாரமற்ற பொய்யான தகவல் என்பது மட்டுமின்றி, முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்தவரை, ஆர்.எஸ்.எஸ்., உடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களுடன் நட்பு பாராட்டினார்.


ஆர்.எஸ்.எஸ்., இரண்டாவது தலைவர் கோல்வால்கர், 51வது பிறந்த நாள் விழா, 1956ல் நாடு முழுதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரையில் நடந்த விழாவுக்கு, முத்துராமலிங்கத் தேவர் தலைமை வகித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில், 'தம் கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ்., கருத்துக்களோடு இணைந்தே இருந்து வந்திருக்கிறது' என்றார்.


உண்மை இப்படி இருக்க, தேச பக்தர்களாலும், தெய்வ பக்தர்களாலும் மதிக்கப்படும் முத்துராமலிங்க தேவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை எதிர்த்தார் என கூறி, மக்கள் இடையே ஆர்.எஸ்.எஸ்., குறித்த தவறான, எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த, தி.மு.க.,வும் அதன் நாளிதழும் முயற்சிப்பது வெட்கக்கேடானது.


ஒரு மாநிலத்தை ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை, ஆதாரமற்ற தகவல்களை எடுத்துப் பகிர்வதும், ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறு பரப்பவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (58)

  • Karthikeyan -

    why dont you file a case or prove it was a wrong against murasoli? well, they published in the name of whatsapp share

  • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

    சர்தார் வல்லபாய் படேல் வள்ளுவர் பாரதி சுபாஷ் சந்திரபோஸ் எல்லாரையும் நம்மாளு ன்னாங்க இப்போ தேவரை முத்துராமலிங்க சாஸ்த்ரி ங்கறாங்க அவங்க ஆளுன்னு உலகுக்கு காட்ட மக்கள் மனதை கவர்ந்த யாருமேயில்லைன்னு தெளிவு படுத்தறாங்க

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    "வெங்காயத்தையும் கூட திருடிய திமுக" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதப்படுவதாக செய்திகள் கசிகின்றன. அது வெளிவந்தால் திமுகவுக்கு டேமேஜ் மிக மிக அதிகமாகவே இருக்கும் என்பது உறுதி. சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்பது போல விடுதலை வெப் சைட்டை மறைத்தால் அது விட்டுச்சென்ற சுவடு அப்படியேதான் இருக்கும் என்பது இந்த திக/திமுக ஐடி விங் தத்திகளுக்கு தெரியாது போல.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    பொய் சொல்லி பயங்கர வன்முறையை தூண்டும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

  • Venkataraman - New Delhi,இந்தியா

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் சிறந்த ஆன்மிகவாதியாகவும் நாட்டுப்பற்று கொண்டவர்களும் விளங்கினார். அவர் பெரியாரின் நாத்திகவாதத்தை எதிர்த்தது மட்டுமின்றி பெரியாரையும் அண்ணாவையும் தென் தமிழகத்தின் பக்கமே வராமல் பார்த்துக் கொண்டார். அவர் கடைசி வரை பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராக விளங்கினார். அப்படிப்பட்டவரை இப்போது திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு மரியாதை செய்து சொந்தம் கொண்டாடுவதும் விளம்பரம் தேடிக்கொள்வதும் கேலிக்கூத்தாக இருக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக இவர்கள் என்ன வேஷம் வேண்டுமானாலும் போடுவார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement