உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
எஸ்.மணி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் பஸ் நிலையத்தில், சீருடையில் இருந்த, 17 வயது பள்ளி மாணவிக்கு, 17 வயது பாலிடெக்னிக் மாணவர் தாலி கட்டிய 'வீடியோ' சமீபத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, சிதம்பரம் போலீசார், 'போக்சோ' சட்டப் பிரிவில் வழக்குப் பதிந்து, மாணவரை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மாணவியை கண்டித்து பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பின், 'மைனர்' பெண்ணின் வீடியோவை வெளியிட்டது உட்பட, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து, பாலாஜி கணேஷை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
ஏராளமான பயணியர் வந்து செல்லும் பஸ் நிலையத்தில், ஒரு மைனர் பையன், மைனர் பெண்ணுக்கு, மஞ்சள் கோர்த்த கயிறால் தாலி கட்டுகிறான்; அதை, அவர்களின் நண்பர்களும் பார்த்து ரசிக்கின்றனர். இது, எதுவுமே தவறு அல்ல.
இந்த நேரத்தில் அங்கிருந்த, கோவிலாம்பூண்டியை சேர்ந்த பாலாஜி கணேஷ், தன் மொபைலில் வீடியோவாக எடுத்து, சமூக வலை தளத்தில் பதிவேற்றுகிறார். அவரை பொறுத்தவரை, இது, சமூக அக்கறையோடு செய்யப்பட்ட ஒரு செயல்.
இப்படி சமூக அக்கறையோடு செயல்பட்டவரை, அந்த மைனர் பெண்ணின் தந்தையிடம் ஒரு புகார் எழுதித்தர சொல்லி வாங்கி, போலீசார் கைது செய்து, உடனடி யாக சிறைக்கு அனுப்பியுள்ளனர். இது தான் நல்லதுக்கு காலம் இல்லை என்பதோ!
'இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்!' இது, ஒன்றுபட்ட சோவியத் யூனியனை பற்றி, மகாகவி பாரதியார் எழுதிய வரிகள். கடந்த, 1966- - 67 காலக் கட்டத்தில், காங்கிரஸ் ஆட்சி குறித்து, தேர்தல் பிரசாரங்களில் இதே வாசகங்களை, தி.மு.க., பயன்படுத்தி ஆதாயம் அடைந்தது.
எந்த காங்கிரஸ் ஆட்சியை, 'இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்' என்று கலாய்த்து ஆட்சியை பிடித்ததோ, அதே கலாய்ப்பை, 2021ல் ஆட்சியை பிடித்த கழகம் தானே கையில் எடுத்து கொண்டுள்ளது. அதன் எதிரொலியே, சிதம்பரத்தில், பள்ளி மாணவிக்கு, பாலிடெக்னிக் மாணவர் தாலி கட்டிய சம்பவத்தை, 'வீடியோ'வாக பதிவு செய்து, வெளியிட்டவரை போலீசார் கைது செய்துள்ள நிகழ்வு.
மகாகவி பாரதியாரின் எந்த வசனத்தை பேசிப் பேசி, கழகம் ஆட்சியில் அமர்ந்ததோ, அதே வசனத்தை தற்போது தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர் பாருங்கள். அதுதான், 'திராவிட மாடல்' தி.மு.கழகம்! சமூக அக்கறையுள்ள எழுத்தாளர்களே உஷார்!
வாசகர் கருத்து (36)
திராவிட மாடல். இதே ஒருத்தன் பொண்ணை வெட்டியருந்தால் அப்பயும் இப்படிதான் போலிஸ் வீடியோ எடுத்தவன அரஸ்ட் செய்யுமா? பஸ் நிலையம் ஒரு பொது இடம் யார் வேண்ணா போட்டோ வீடியோ எடுக்கலாம்.
சமூக அக்கறையோடு செயல்பட்டவனா அவன்? இருவருக்கும் புத்திசொல்லி அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தியிருந்தால் அவன் சமூக ஆர்வலன்.. இல்லையேல் காவல்துறையிடம் அந்த வீடியோ பதிவை கொடுத்து தக்க ஆக்க்ஷன் எடுக்க உதவியிருந்தால் அவன் சமூக ஆர்வலன். அவனை போலீஸ் முட்டிக்கு முட்டி தத்துவத்தில் தவிர இல்லை.
நடுரோட்டில் அறிவாளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய காவல்துறை அதிகாரியை கண்டுகொள்ளாமல் சென்றவனுக்கு மந்திரி பதவி கொடுத்து மரியாதை செய்யும் திராவிஷ ஆட்சி....
வீடியோ எடுத்து தவறு. அவர் அந்த இருவருக்கு புத்தி சொல்லி வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டும். தவறு என்று வீடியோ எடுத்தவருக்கு தெரியாதா. கூடி இருந்தவர்களுக்கு தெரியாத.
சமூக தவறுகளை வீடியோ எடுத்து புகார் கொடுப்பது தவறில்லை, ஆனால் போலிஸுக்கு மட்டும் கொடுத்திருக்க வேண்டும், மிடியாக்கள் வசம் கொடுத்தது தவறு. அதனால்தான் காய்து நடவடிக்கை. மணி இதைவைத்து அரசையே குற்றம் சொல்வதும் தவறு, 7.5 கோடி மக்கள் இருக்கும் மாநிலத்தில் தவறுகள் நடக்காமல் இருக்காது, நடவடிக்கை எடுக்கப்பட்டதா இல்லையா ? ஏன் உங்களுக்கு தூத்துக்குடி துப்பாக்கிசூடு நினைவில் வரவில்லையா? அரசும் அதிகாரிகளும் தவறு செய்ததை என்ன சொல்வீர்கள் ?