ADVERTISEMENT
புதுடில்லி: நாட்டின் 5வது வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து நவ.,10ம் தேதி துவங்கி வைக்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி, புதுடில்லி - வாரணாசி மற்றும் புதுடில்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, காந்திநகர் - மும்பை, உனா - டில்லி இடையே 4 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்நிலையில், நாட்டின் 5வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, சென்னை முதல் மைசூர் வரை இயக்கப்பட உள்ளன. சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் வரும் நவம்பர் 10ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சென்னையில் இருந்து இந்த ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.
வாசகர் கருத்து (48)
பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் என்பது வடிகட்டின பொய் 2019 இல் முதல் வந்தேபாரத் டில்லி வாரணாசியிடையே துவக்கி வைத்தார் மோடி 2022 ஜனவரியில் வந்து பெரம்பூர் ICF தொழிற்சசாலையை தயாரிக்க "ஆர்டர்" போட்டார் ஆறேழு மாதத்தில் முதல் செட் ரயில் வெளி வந்தது
We don't need such train in Tamil Nadu. It is un constitutional. We will object imposition of Vanda Bharath in any form. Can I book ticket for my children only?
வந்தே பாரத் ரயிலுக்கும் சதாப்தி ரயிலுக்கும் என்னென்ன வித்தியாசம் ?? Running time / fare / facility
ரயில்: நவ.,10 முதல் இயக்கம். சிறப்பு மற்றும் வாழ்த்துக்கள். அப்படி என்றால் முன்பதிவு செய்யலாமா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
There are many trains and so many passengers. So people can choose their choice of trains. They need not prevent any new developments.