திருவனந்தப்புரம்: கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில் வசித்து வந்த தர்மபுரியை சேர்ந்த பத்மா மற்றும் கேரளாவை சேர்ந்த ரோஸ்லின் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன், துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

நர மாமிசம்:
போலீசார் விசாரணையில், குற்றவாளி லைலா கொடுத்த வாக்குமூலம்: மந்திரவாதி ஷபி சில புத்தகங்களை கொடுத்தார். அதில் நரபலி மற்றும் இறைச்சி உண்பது போன்ற தகவல்கள் இருந்தன. நரபலிக்கு பின்னர், இருவரின் சதைகளை வெட்டி எடுத்து சமைத்து சாப்பிட்டோம். இருவரும் அணிந்திருந்த நகைகளை முகமது ஷபி எடுத்துக் கொண்டார். நகைகள் அனைத்தும் எர்ணாகுளம் மற்றும் பத்தனம் திட்டாவில் அடகு வைக்கப்பட்டது எனக் கூறினார்.
இது குறித்து, போலீசார் கூறுகையில், நரபலி கொடுக்கப்பட்ட 2 பேரின் உடல் பாகங்கள் 4 இடங்களில் மீட்கப்பட்டது. இதில் ரோஸ்லினின் சடலம் 56 துண்டுகளாகவும், பத்மாவின் உடல் 5 துண்டுகளாகவும் மீட்கப்பட்டது. இவர்கள் 3 பேரையும், வரும் அக்.,26ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து, தீவிர விசாரணை மேற்கொள்ள எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்றனர்.
இது குறித்து, கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நாகரீக உலகில் இப்போதும் அரக்க மனதுடன் சிலர் உள்ளனர் என்பதையே இந்த செயல் காட்டுகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (36)
அமைதி maarkathinarin Attoozhiyam
இந்த முஸ்லிம் மந்திர வாதிக்கு பணம் வேண்டும் அதற்க்கு லைலா மற்றும் சிங்கை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நகை களை எடுத்துக் கொண்டு ஓடிய நாய்.. மூர்க்கன் சகவாசம் அழித்துவிடும்
ரைட்டரா . . .மனுஷ கரி சாப்பிட ஆரம்பிச்சிட்டாய்ங்க . . . இனிமே உசுர காப்பாத்தறது ரொம்ப கஷ்டம்ரா . . . 65-கோழின்னு நம்ம கரிய 65-ஆக்கிருவாய்ங்க இல்ல பிரியாணியோட பிரியாணியா பிசைஞ்சிடுவாய்ங்க . . . வெளிய மசாலை பாத்து ஏமாந்து தின்ர கூடாது . . .நல்லா பிச்சி பிச்சி மோந்து பாத்து சாப்பிடணும் . . .
அதிகம் படித்த மாநிலம்.
லெக் பீசா வை...