ADVERTISEMENT
ஏற்காடு : ''பிரதமரின் நலத்திட்டங்களை மக்களிடம் சேர்க்காமல், மாநில அரசுகள் மறைக்கின்றன,'' என, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் பிஷ்வேஷ்வர் டிடு குற்றஞ்சாட்டினார்.
சேலம் மாவட்டம், ஏற்காடில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் குறை கேட்பு முகாமுக்கு, பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், மத்திய பழங்குடியினர் விவகாரம் மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் பிஷ்வேஷ்வர் டிடு, நேற்று பங்கேற்றார். துாய்மை பணியாளர்களை சந்தித்தார். அப்போது, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, விடுமுறை போன்ற சலுகைகள் கேட்டு, அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பெரியகாடு கிராமத்துக்கு சென்றார். தங்கள் வழக்கப்படி அமைச்சருக்கு, மலை கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் குறை கேட்டறிந்த அமைச்சர், மனுவாக எழுதி கொடுக்கும் படியும், கலெக்டரிடம் கொடுத்து, நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
அப்போது அமைச்சர் மக்களிடம் பேசியதாவது:
பிரதமரின் நலத்திட்டங்கள் அனைத்தும் கிராமப்புறங்களுக்கு முழுமையாக கிடைக்க செய்ய வேண்டும்.இதனால் உங்களின் குறைகளை கேட்டு சரி செய்யவே, நான் இன்று இங்கு வந்துள்ளேன். இந்த ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தில், நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
நலத்திட்டங்களை கொண்டு வரும் பிரதமர் மோடியின் பெயர் வெளியில் தெரியாமல் இருக்க, மாநில அரசுகள் மக்களை திசை திருப்பி வருகின்றன. தரமான கல்வி கிடைக்க நாடு முழுதும், 700 பள்ளிகள் கட்டப்பட்டு வருகின்றன. அதில், தமிழகத்தில் எட்டு இடங்களில் அதற்கான பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (8)
தேவாங்குக்கு சரணாலயம் அமைக்கிறார் தமிழக முதல்வர். அதுபோன்ற திட்டங்களை நீங்கள் ஏன் வரவேற்பதில்லை? அடுத்து டைனோசாருக்கு ஒரு சரணாலயம் பலகோடி செலவில், அதுவும் மக்களின் வரிப்பணத்திலிருந்து, மக்களின் பொழுது போக்கிற்காக. இதை எல்லாம் புகழ்ந்து ஒரு கருத்து போடாதீர்கள்? என்ன மக்களோ நீங்கள்?
என்னது, - மாநில அரசுகள் எவ்வளவு தயிரியம் இருந்தால் - பிரதமரின் விளம்பரங்களை மறைக்க முயல்வார்கள்.
வரலாற்றை மறைப்பது, அடுத்தவர் சாதனையை மறைப்பது என்பது திராவிட மாடலின் முதன்மை சித்தாந்தம். தமிழினமே 17 ஆம் நூற்றாண்டில் தோன்றியது என உருட்டுபவர்களை என்ன செய்யமுடியும்.
திராவிட கட்சிகள் கில்லாடிகள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கவும் செய்வார்கள் ஒதுக்கப்படும் நிதியை ஆட்டையை போடுவார்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இந்த மத்திய மந்திரிகள் அவர்கள் அப்பன் வீட்டு சொத்தில் இருந்து எடுத்துக் கொடுத்தது போல் என்ன ஒரு ஆணவப் பேச்சு! எல்லாம் எங்களிடம் இருந்து வரி என்ற பெயரில் அதிகப் பணத்தை வசூலித்து விட்டு அதில் பாதியை வட இந்திய பீடாவாயன்களுக்கு கொடுத்து விட்டு மிச்சம் மீதியை கொடுக்கும் போதே இத்தனை எகத்தாளம் உங்களுக்கு? முழுவதையும் கொடுத்தால் என்ன பேச்சு பேசுவீர்கள்?