ADVERTISEMENT
சென்னை : மணல் கடத்தல், மறைமுக லாட்டரி விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையில், அரசியல் தலையீடு இருப்பது பற்றி விசாரிக்க, உளவுத்துறை போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
காவல் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குற்ற நிகழ்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது' என்று கூறி வருகிறார்.

ஆனால், மணல் கடத்தல், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு பின்னணியாக இருப்பது என, ஆளம் கட்சியினரின் அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அ.தி.மு.க.,வை சேர்ந்த எவரும் காவல் நிலையங்களுக்கு செல்லக்கூடாது என உத்தரவிட்டார். நடவடிக்கை பாயும் என்பதால், கட்சியினரும் அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டனர்.

தற்போது நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. ஆளுங்கட்சியினர் காவல் நிலையங்களுக்கு சென்று, அதிகாரிகளை மிரட்டுகின்றனர். இதற்கு சாட்சியாக, சமூக வலைதளங்களில், பல 'வீடியோ'க்கள் வெளியாகி வருகின்றன.
முதல்வர் சாட்டை சுழற்றாவிட்டால், அவர்களை கட்டுப்படுத்த முடியாது என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மணல் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து மற்றும் போதை பொருள் கடத்தல் ஆசாமிகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் பற்றி விசாரிக்க, உளவுத்துறை போலீசார் களமறிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் மாவட்ட வாரியாக விசாரித்து, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்க உள்ளனர். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை பாயும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து (20)
கப்பம் ஒழுங்காக போய் சேர்ந்து விட்டால் அவர் ஏன் சாட்டையை சுழற்றப்போகிறார்.
தமாசு. தமாசு
ஆளுமை இல்லாத வடிவேலு ஒரு அமைச்சரை வைத்து அலப்பறை பண்ணுவது போல இருக்கு , அவ்வப்போது யாரங்கே இந்த தமிழ்புலவனை தலைகீழாக கட்டிவைத்து மிளகாய்ப்பொடியை தூவி என்பது போல நடவடிக்கைகள் வேறு , அந்த காட்சிகள் மிக நேர்த்தியாக படமெடுக்கப்பட்டிருக்கும் , இதுபோலவெல்லாம் நடக்குமா என்று யோசித்து கொண்டிருக்கையில் கண் முன்னே
ஏற்கனவே அவருக்கு தூக்கம் வரவில்லை ஆளும் கட்சியினர் செய்யும் அராஜகங்களால். போதாக்குறைக்கு இப்ப இந்த செய்தி வேற. போச்சு, இனிமே அவர் தூங்கவே முடியாது.. முதலிலேயே கட்சியினரை அடக்கி இருக்க வேண்டும். அடக்கவில்லை. இப்ப தூக்கம் கெடும் அளவுக்கும் கட்சியினரின் அராஜகங்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பொள்ளாச்சி மட்டை மில் முதலாளிகளிடம் ஐந்து லட்சம் வீதம் மிரட்டி வாங்கி செல்வதாக தகவல் வருகிறது. சாட்டையை எடுத்து சுற்றுவதற்கு முன் பணத்தால் அடித்து விடுவாங்க அந்த கரூர் பார்ட்டி...