Load Image
Advertisement

சிறுமியிடம் சில்மிஷம் :பள்ளி தாளாளருக்கு 8 ஆண்டு ஜெயில்

 சிறுமியிடம் சில்மிஷம் :பள்ளி தாளாளருக்கு 8 ஆண்டு ஜெயில்
ADVERTISEMENT
சிறுமியிடம் சில்மிஷம் செய்த பள்ளி தாளாளருக்கு, 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை சாலை, அரசு சார்நிலை கருவூலத்திற்கு பின்புறம் சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, பள்ளி தாளாளராக பணியாற்றியவர் குருதத், 64. கடந்த 2019 நவ.,24ல், சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்துள்ளது.

இதில், கலந்து கொண்ட, ஐந்தாம் வகுப்பு படிக்கும், 10 வயது சிறுமியிடம் தமிழ் எழுத்து பயிற்சி கொடுப்பதாக கூறி, அப்போது பள்ளி தாளாராக பணியாற்றிய குருதத், சிறுமியை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். ஒரு அறையில் கதவை மூடி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் அழுதபடி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அப்போது இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சசிகலா, பள்ளி தாளாளர் குருதத்தை உடனடியாக போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

இவ்வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நீதிபதி பி.சுதா தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட குருதத் சிறுமியை அறைக்குள் வைத்து பூட்டியதற்காக ஒரு வருடம் மற்றும், ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஏழாண்டு ஆண்டு சிறை மற்றும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.


வாசகர் கருத்து (6)

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    அவனை ஏன் தூக்குல போடக்கூடாது ????

  • SELVAN - SALEM,இந்தியா

    இந்த தெள்ளத்தெளிவான குற்றத்திக்கு மூன்றாண்டு விசாரணை செய்ய எடுத்துக்கொண்ட நீதிமன்றத்திற்கு ஒரு சபாஷ் ...கேட்கவே சங்கடமாக இருக்கிறது.. இந்த மூன்றாண்டுகள் அந்த குடும்பம் பட்ட வேதனைக்கும், நீதிமன்றத்திற்க்கு நடையாய் நடந்த அந்த பெற்றோர்க்கும் யார் ஆறுதல் சொல்வது ?

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    மலை உச்சியில் இருந்து உருட்டி விட்டு வேடிக்கை பாருங்க

  • Mohan - Thanjavur ,இந்தியா

    அதெல்லாம் சரி,அந்த குருதத்தி சார்பாக ஒருத்தன் வாதாடி இருப்பானே, அவனுக்கு என்ன தண்டனை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement