காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பரசன், 'புருஷன் சொன்னா கேட்காத, மாமியார் சொன்னா கேட்காத, குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை வையுங்கள்' என கருவுற்ற தாய்மார்களிடம் வலியுறுத்தினார்.
மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் ஆகியோர் கருவுற்ற தாய்மார்களுக்கு நலங்க வைத்து ஆரத்தி எடுத்து சீமந்த விழா நடத்தினர். பின்னர் விழா மேடையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

கருவுற்ற தாய்மார்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரினை சூட்ட வேண்டும். முன்பு எல்லாம் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டி உள்ளனர்.
அந்த பெயர்கள் எல்லாம் கடவுள் பெயர்களாகவோ, அழகான தமிழ் பெயர்களாகவோ இருந்துள்ளது. ஆனால் தற்போது வடமொழி கலந்த பெயரையோ அல்லது புரியாத பெயரேயோ வைக்கின்றனர். ஆகவே இனி பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள் வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சமீபத்தில் ஒரு தொடக்கப்பள்ளியில் நோட்டு, புத்தகம் கொடுக்க சென்றேன். அங்கிருந்த சுமார் 50 மாணவர்களிடம் பெயரைக் கேட்டேன். 4, 5 பேரை தவிர மற்ற அனைவரும் அஸ், புஸ்ஸூனு தான் பெயர் வைத்துள்ளனர்,
தமிழ் பெயரே கிடையாது. அதனால் வீட்டுக்காரன் சொன்னா கேட்காதே, மாமியார் சொன்னா கேட்காதே, நேரா ஒரு ஜாதகக்காரன் கிட்ட போய் பெயர் வைத்துக்கொடு என கேட்காதே, அவன் முதல் எழுத்தை தமிழ் இல்லாத ஒரு மொழியில் வை என சொல்வான். அதையெல்லாம் கேட்காதீர்கள். நல்ல தமிழ் பெயரை சூட்டி வலுவாக, அறிவுள்ளவர்களாக வளர்த்து, இந்த நாட்டின் தூண்களாக வளர்த்திட வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (39)
, நீங்கெல்லாம் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து வர்றீங்க? ஆமா, ஸ்டாலின், ரெட் ஜெயண்ட், சன் பிக்சர்ஸ், ஸ்னோ இதெல்லாம் தமிழ் பெயரா?
முதலில் தமிழை வளருங்கள். பின்னே எல்லாம் தானாக வளரும். தமிழ் நாட்டில் இப்போது தமிழ்தான் பிரச்சினை. யாருக்கும் தமிழ் தெரியவில்லை. ல, ள, ழ வரவில்லை. தமிழுக்கு அழகே "ழ' தானே? திராவிட கோக்குமாக்கினால் தொல்லை.
இந்த பெயர்தான் வைக்கணும் அந்த பெயர்தான் வைக்கணும் என்று சொல்ல நீங்க யாருங்க. ழந்தமா தலைமை தாங்கினோமா என்று இருக்கனும்.பெயர்வைப்பதை பெற்றவர்கள் பார்த்துப் நாங்க. உங்கள் தலைவன் பெயரே தமிழ் கிடையாது
ஆமாம் உதயநிதி, , கருணாநிதி, தயாநிதி, கலாநிதி என்று வடமொழி கலக்காத சுத்த தமிழ் பெயர்கள் வைக்கவும். திராவிடம் என்பதே தமிழ் கிடையாது, திராவிட மாடல் என்பதே சுத்த தமிழ்.
ஆமாம், சுத்த தமிழில், ஸ்டாலின், ஆதித்யா, உதய நிதி, கிருத்திகா, என்று வையுங்கள் தாய்மாரே தங்கள் குடும்ப வாரிசுக்குப் பேர் வைக்கும் விஷயத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் புருஷன் , மாமியாரை விட இவர் பெரியவரா கருத்து சொல்ல?