சென்னை: கட்டாயமாக ஹிந்தி மொழியை புகுத்தி இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்டாயமாக ஹிந்தி மொழியை புகுத்தி இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை சரி சமமாக நடத்த வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும்.
ஒரே நாடு என்ற பெயரில் ஒரே மதம், ஒரே மொழி என பா.ஜ., அரசு செயல்படுவது இந்திய ஒருமைப்பாட்டு ஊறுவிளைக்க கூடியதாகும். ஹிந்து மொழியை கட்டாயமாக்குவதகை் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும். தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம்.

நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றைக் கட்டாயமாக்க முயல்வது, ஹிந்திக்காரர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்பது போலவும், இந்தியாவின் மற்ற மொழிகளைப் பேசுவோர் இரண்டாந்திர குடிமக்கள் என்பது போலுவும் பிரித்தாளுகின்ற தன்மையைக் கொண்டது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
திரவநிலை அழுத்தப்பட்ட எரிவாயு நிலையம்:
தலைமைச்செயலகத்தில், திரவநிலை அழுத்தப்பட்ட எரிவாயு நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் ‛ வீடியோ கான்ப்ரஸ்' மூலம் திறந்து வைத்தார். இது தமிழக்தில் முதன் முறையாக அமையும் திரவநிலை அழுத்தப்பட்ட எரிவாயு நிலையம் ஆகும்.
வாசகர் கருத்து (73)
இவரின், இவரின் கட்சியின், ஆட்சியின் எந்த தவறுகளுக்கும் முட்டு கொடுக்க முடிய வில்லை என்று இன்று மறுபடியும் 65 இல் தந்தை கையில் எடுத்த மொழி பிரச்சனையை கையில் எடுத்து உள்ளார். ஆனால் இது 2022 .
Vera velai illiya
உங்க குடும்ப உறுப்பினர்களும் கழக உறுப்பினர்களும் நடத்தும் கல்விக் கூடங்களில் இந்தி பயிற்றுவிப்பதை நிறுத்த வக்கில்லை. குழந்தைகளிடம் ஏன் இந்தியை திணிக்கிறீங்க? காசு சம்பாதிக்க மட்டும் இந்தி வேண்டுமா?
ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு இப்போது தென் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பரவிவிட்டது. இந்த விஷயத்தில் இப்போது தமிழகம் தனித்து நிற்கவில்லை.இனி இந்தியாவில் எந்த கட்சி மத்தியில் வந்தாலும் ஹிந்தித் திணிப்பு செய்ய முடியாது.
எல்லா மாநிலத்திலும் ஹிந்தி எதிர்ப்பு வந்து விட்டது என்பவருக்கு சில கேள்விகள் தலைவரின் சொந்தங்கள், மற்றும் அவர்கள் கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் ஏன் ஹிந்தி பயிற்றுவிக்க படுகிறது? அதை ஒரு விளம்பரமாக சொல்லி. ஏன் மாணவர் சேர்க்கையில் சொல்கிறார்கள்.? ஹிந்தி படிக்க விருப்பம் இல்லாதவர்கள் படிக்க வேண்டாம் என்கிறார்களே. அதே போன்று எனக்கு சயன்ஸ் பாடம் பிடிக்க வில்லை, என் நண்பனுக்கு கணிதம் பிடிக்காது. அதை தள்ளி விட முடியுமா? ஹிந்தி பிடிக்காது ஏன் என்றால் தமிழை அது அழித்து விடும். சரி எந்த உணவை பிடிக்காமல் வடனாட்டானின் பாணி பூரியை தின்கிரீர்கள்.அது நம் பஜ்ஜி, பொண்டாவை அழிக்காதா? வட நாட்டானை எல்லா வேலைக்கும் பயன்படுத்துகிறீர்கள் அதனால் நம் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதை ஏன் செய்ய வேண்டும். தமிழன் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் அவனை நாம் விட கூடாது என்று அவனை சம்பளம் கொடுத்து அழகு paarkkiromaa? இல்லையே. ஏன் என்றால் சுயநலம் கூலி கம்மியாக வாங்கி கொண்டு மாடு மாதிரி வேல பார்ப்பார்கள் வட நாட்டினர். நம் தமிழர் சட்டம் பேசுவார்கள். 1965 க்கு முன் அரசு பள்ளிகளில் ஹிந்தி பயிற்றுவிக்க பட்டது. அதில் மதிப்பெண் பார்க்க படுவதில்லை. அதில் ஈ டுபாட்டுடன் படிப்பவர்கள் படிக்கலாம் ..வேண்டாம் என நினைப்பவர்கள் படிக்க தேவை இல்லை. வகுப்பு மட்டும் நடத்தப்படும். அது போல் இப்போதும் இருக்கலாமே. தமிழை வளர்ப்பதாக சொல்கிறார்களே, இவர்களின் ஆட்சியில் பொது தேர்வில் 40000 மாணவர்களுக்கு மேல் தமிழில் தோல்வி அடைந்தனர். அவர்களை ஹிந்தி வந்து தான் அழித்ததா? பார்ப்பனன் படித்து தான் நம்மை அழித்தான் என்றோம். அவனின் உரிமையை பரித்தோம். அவன் கலங்கினானா? வேறு வழிகளில் முன்னேறி கொண்டு போகிறான். நாம் அரசு சலுகை பெற்று இப்போது மிக நன்றாக உள்ளோமா? இன்னும் 100வருடம் சலுகை வேண்டும் என்கிறோம். எத்தனையோ கோவில்களை மொகலாய மன்னர்கள் அழித்தனர். ஹிந்தி மதத்தை அழிக்க வரி எல்லாம் போட்டனர். ஹிந்தி மதம் அழிந்ததா? இல்லை கோயில்கள் தான் அழிந்தாதா? யோசியுங்கள்