புதுடில்லி : “லோக்சபாவில் இரண்டு எம்.பி.,க்களுடன் நுழைந்து, தற்போது 303 இடங்களைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.,வின் வளர்ச்சி 2024ல் இருந்து தலைகீழாக மாறும்,” என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான மனோஜ் ஜா கூறினார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று புதுடில்லியில் நடந்தது. பீஹார் முன்னாள் முதல்வரும், அக்கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின், அக்கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான மனோஜ் ஜா கூறியதாவது: பீஹாரில் பா.ஜ., கூட்டணியில் இடம் பெறாத கட்சிகள், விருப்பு வெறுப்புகளை மறந்து ஓரணியில் திரண்டு நாட்டுக்கே முன்னுதாரமாக திகழ்கின்றன. அதேபோல் நாடு முழுதும் எதிர்க்கட்சிகள் பா.ஜ.,வுக்கு எதிராக ஓரணியில் இணைய வேண்டும்.

லோக்சபாவில் இரண்டு எம்.பி.,க்களுடன் நுழைந்து, தற்போது 303 இடங்களைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.,வின் வளர்ச்சி 2024 பொதுத் தேர்தலில் இருந்து தலைகீழாக மாறும். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒரே நோக்கத்துடன் கைகோர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, செயற்குழு கூட்டத்துக்கு வந்திருந்த லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், பீஹார் அமைச்சருமான தேஜஸ்வி யாதவ், பாதியிலேயே வெளியேறினார். கட்சியின் பொதுச் செயலர் ஷ்யாம், தன்னை அவமதித்து விட்டதாக கூறி, அவர் வெளியேறியது செயற்குழு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து (26)
கட்சிக்கு உள்ளேயே என்னை மதிக்க வில்லை என வெளி நடப்பு. இதில் எல்லா எதிர் கட்சிகளும் ஒன்று சேர்ந்து பிஜேபி யய் எதிர்த்து,, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற உழைக்க வேண்டுமாம். இன்னும் 1 1/2 வருடம் உள்ளது. எல்லா எதிர் கட்சியும் ஒரே பக்கமாக சேருங்கள். பிஜேபி ஆட்சியின் குறைகளை மக்களிடம் சொல்லுங்கள். இதெல்லாம் செய்ய முடிந்தாலும் யார் பிரதம மந்திரி வேட்பாளர் என்ற கேள்வி வரும்போது கூட்டணி ஒற்றுமை காணாமல் போய் விடுமே. எனவே முதலில் அதை தீர்மானியுங்கள். ஸ்டாலின் இருந்து பரூக் அப்துல்லா வரை எனக்கு தெரிந்து 78 பேருக்கு எதிர் கட்சியில் பிரதம மந்திரி ஆசை உள்ளது. எதிர் கட்சியினர் கூட்டம் நடத்தினாலே மேடையில் இந்த 78 பெரும் முன்னால் நின்று தங்களை முதன்மை படுத்தி கொள்ள வேண்டும் என்பார்களே. இதோ ஒரு கட்சி கூட்டத்திலேயே சக கட்சிக்காரர் என்னை மதிக்க வில்லை என வெளி நடப்பு செய்யும்போது இவர்கள் எப்படி ஒன்றுபட போகிறார்கள்?
கெட்டுப்போன உருளை கிழங்கு சொல்லிவிட்டதால் அப்படியே நடந்துவிடும்
அது அவரது கனவு, அதை சொல்லிவிட்டார், ஆனால் நடந்து விடுமா? பிஜேபியுடன் கூட்டணி கண்டு வெளியேறியவர்கள்
கூட்டத்துக்கு வந்திருந்த லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், பீஹார் அமைச்சருமான தேஜஸ்வி யாதவ், பாதியிலேயே வெளியேறினார். ...
நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து பாஜகவை தோற்கடிக்க வேண்டுமாம். சரி அப்படியே செய்துவிடலாம். பாஜகவை எதற்க்காக தோற்கடிக்கவேண்டும் என்று ஏதாவது ஒரு நியாயமான காரணத்தையாவது மக்கள் முன்னாள் சொல்லுங்களேன் பார்க்கலாம். உங்களுக்கு மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை என்பதற்காக பாஜகவை தோற்கடிக்க வேண்டுமா?