தாய்நாட்டுக்கான கடமைகளை மறக்க வேண்டாம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு
சண்டிகர்: வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுத்தாலும் தாய்நாட்டுக்கான கடமைகளை மறக்க வேண்டாம் என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் 52வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுத்தாலும் தாய்நாட்டுக்கான கடமைகளை மறக்க வேண்டாம். காந்தியடிகளின் சர்வோதயா குறித்து கோட்பாட்டை தனிப்பட்ட முன்னுரிமை யாக வைத்திருக்க வேண்டும்.

பஞ்சாப் பொறியியல் கல்லூரி தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் உலகத் தரத்திலான திறமைகளை நாட்டுக்கு வழங்கியுள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கு அதிக உத்வேகம் அளிக்க, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள செயலக கட்டடத்தை திறந்து வைப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த பசுமையான கட்டுமானத்துடன் தொடர்புடைய அனைவரையும் நான் பாராட்டுகிறேன் என்றார்.

வாசகர் கருத்து (3)
//"தாய்நாட்டுக்கான கடமைகளை மறக்க வேண்டாம்"// பாலைவன மதத்தவர் தங்கள் தாய்நாடாகக் கருதுவது ....
தாய்நாட்டுக்காக எந்த கடமையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், தாய்நாட்டுக்கு துரோகம் மட்டும் செய்யாதீர்கள். இந்த வேண்டுகோள் குறிப்பாக நம் நாட்டு தேசதுரோகிகளுக்கு. குறிப்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்ஸ், திமுக போன்ற கட்சியினருக்கு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
// பெண் மாணவர்கள்// அடடே இது புதுசா இருக்கே...