Load Image
Advertisement

மத்திய அரசுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம்

தஞ்சாவூர்-''கனிமொழிக்கு பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவர் பதவி வழங்கியதையும், கடலில், 88 கோடி ரூபாய் மதிப்பில் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைப்பதற்கு முதல் கட்ட அனுமதி வழங்கிய மத்திய அரசையும் கண்டிக்கிறோம்,'' என, ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
Latest Tamil News

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், நேற்று அவர் கூறியதாவது:

வள்ளலாருக்கு விழா நடத்தி பெருமைப்படுத்தும் தமிழக அரசு, ஜீவகாருண்ய கொள்கை, மது விலக்கு, புலால் மறுத்தல், பசிப்பிணி போக்குதல் ஆகிய கொள்கைகளை, நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஹிந்து என்ற வார்த்தை மீது, திருமாவளவனுக்கு தவறான புரிதல் இருக்கிறது. யாரும் ஒன்றுபடக் கூடாது எனக் கருதும் அவரை, வன்மையாக கண்டிக்கிறேன்.

மின் கட்டண உயர்வு பிரச்னையை திசை திருப்பவே, தி.மு.க., - எம்.பி., ராஜாவை வைத்து, ஹிந்து மக்களை அவமதித்து, ஆபாசமாகப் பேச வைக்கின்றனர்.

ஹிந்துவை பற்றி கேவலமாகப் பேசிய எம்.பி., ராஜாவை கைது செய்யாமல், ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர்.

எம்.பி., கனிமொழிக்கு பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவர் பதவி வழங்கியதையும், கடலில், 88 கோடி ரூபாய் மதிப்பில் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைப்பதற்கு முதல் கட்ட அனுமதி வழங்கிய மத்திய அரசையும் கண்டிக்கிறோம்.
Latest Tamil News
ஹிந்து சமய அறநிலையத் துறை உயர்மட்டக் குழுவில், அரசியல்வாதிகள், ஆன்மிகத்திற்கு எதிரானவர்கள், மாற்று மதத்தினரை நியமனம் செய்தது தவறு.

தமிழகத்தில் கோவில்கள் முன் உள்ள ஈ.வெ.ரா., சிலைகளை இடம் மாற்றி அமைக்க வேண்டும். கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (30)

  • Dharmavaan - Chennai,இந்தியா

    மத்திய அரசும் மக்கள் வரிப்பணம் வீணடிக்க தடை செய்திருக்க வேண்டும்.பொறுப்பற்ற செயல்.

  • S Bala - London,யுனைடெட் கிங்டம்

    திருமா எனும் தெலுங்கனுக்கு தமிழர் பற்றி புரியாமல் போனால் யாருக்கும் கவலையில்லை. ஆனால் மத்திய அரசு அண்ணாமலைக்கு எதிராக செயல்படுகிறது அசிங்கம்.

  • Gurupackiam -

    0 .........

  • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

    காமெடி பீஸு

  • தமிழ்நாட்டுபற்றாளன் - CHENNAI,இந்தியா

    ,,,,,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்