Load Image
Advertisement

காங்., பிரமுகர் புத்தகத்திற்கு கம்யூ., - எம்.பி.,க்கள் தாராள நிதி!

காங்., பிரமுகர் எழுதிய புத்தகத்தை, தங்கள் தொகுதி நிதியில் வாங்குவதற்கு, கம்யூ., - எம்.பி.,க்கள் தாராளமாக நிதி ஒதுக்கி, 'புதிய அரசியல் புரட்சி'யை அரங்கேற்றி உள்ளனர்.நாடு முழுதும் உள்ள லோக்சபா எம்.பி.,க்களுக்கு, ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் தொகுதி நிதி ஒதுக்கப்படுகிறது.

Latest Tamil News

'காமராஜ் ஒரு சகாப்தம்'இந்த நிதியை வைத்து, தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி வழங்கலாம். அதுபோல, நுாலகங்கள், அரசுப் பள்ளிகளுக்கு தளவாடங்கள், புத்தகங்கள் வாங்கவும் இந்த நிதி ஒதுக்கப்படுகிறது.கோவை மார்க்சிஸ்ட் எம்.பி., நடராஜன், திருப்பூர் இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயன்உள்ளிட்ட எம்.பி.,க்களும், தொகுதி நிதியில் எந்தெந்த புத்தகங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்க பரிந்துரை செய்தனர் என்ற விபரத்தை, கோவையைச் சேர்ந்த லோகநாதன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்றுள்ளார்.


அதன்படி, இந்த இரண்டு கம்யூ., - எம்.பி.,க்களும், காங்., பிரமுகர் கோபண்ணா எழுதிய, 'காமராஜ் ஒரு சகாப்தம்' என்ற புத்தகத்தை, தங்கள் தொகுதி நிதியில் பல லட்ச ரூபாய் ஒதுக்கி, பள்ளி, கல்லுாரி, நுாலகங்களுக்கு வாங்கிக் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.இந்த நுாலின் விலை 1,750 ரூபாய்; கழிவு போக 1,500 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோபண்ணாவின், 'நவ இந்தியா' பதிப்பகமே இதை வெளியிட்டுள்ளது. இப்புத்தகத்திற்கு கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 'ஆர்டர்' கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கவில்லைதிருப்பூர் எம்.பி., சார்பில், 116 பள்ளிகளுக்கு தலா ஐந்து வீதம் 580 புத்தகங்கள் வாங்குவதற்கு, தொகுதி நிதி 8.70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், அங்குள்ள மாவட்ட நுாலகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், கால்நடை பல்கலை மற்றும் அரசு ஐ.டி.ஐ., போன்றவற்றுக்கும் தலா ஐந்து புத்தகங்கள் உட்பட மொத்தம் 9.90 லட்சம் ரூபாய் எம்.பி.,யின் தொகுதி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதே புத்தகத்தை, கோவையிலுள்ள 91 நுாலகங்கள், 51 பள்ளிகளுக்கு வழங்குவதற்கு, 2.25 லட்ச ரூபாயை, கோவை எம்.பி., நடராஜன் தன் தொகுதி நிதியிலிருந்து வாரி வழங்கியுள்ளார்.


இதே எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பதிப்பகமான, 'பாரதி' புத்தகாலயத்தில் 342 நுால்களை வாங்குவதற்கு, 4 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளார். காங்., நிர்வாகி ஒருவர் எழுதிய புத்தகத்துக்கு, கம்யூ., - எம்.பி.,க்கள் இருவரும் சேர்ந்து 12 லட்ச ரூபாய் ஒதுக்கி, ஓர் 'அரசியல் அதிசயத்தை' நிகழ்த்தியுள்ளனர்.ஆனால், இந்த புத்தகங்களை, காங்., - எம்.பி.,க்களான திருநாவுக்கரசர், ஜோதிமணி உள்ளிட்ட யாருமே பரிந்துரை செய்து, நிதி ஒதுக்கவில்லை.

Latest Tamil News

விசித்திர விதிமீறல்

மனுதாரர் லோகநாதன் கூறியதாவது:எம்.பி.,க்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளில், இது போன்று தனிப்பட்ட முறையில் எந்த பரிந்துரையும் செய்யக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் நிறுவனத்துக்கு, ஒரு எம்.பி., எப்படி பரிந்துரை செய்தார்; அதை எப்படி கலெக்டர் ஏற்றுக் கொண்டார் என்ற கேள்விகள் எழுகின்றன.கோபண்ணாவின் புத்தகம், 1,415 ரூபாய்க்கு கிடைக்குமென்று இணையத்தில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் எம்.பி., தொகுதி நிதியில், அரசு நுாலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் புத்தகத்தில் குறிப்பிட்ட தொகையில் ஒரு பைசா கூட குறைக்காமல் வினியோகிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -வாசகர் கருத்து (7)

 • duruvasar - indraprastham,இந்தியா

  பரஸ்பர சகாய நிதி வேண்டுமானால் குறைந்தபட்சமாக அந்த அமைப்பின் ஒரு பங்கயாவது வாங்கி பங்குதாரராக இருக்கவேண்டும். ஆகவேதான் அதற்க்கு பரஸ்பரம் என்று பெயர்.

 • soundar rajan -

  நன்றி

 • HONDA -

  உண்மையான காங்கிரஸ் இல்லை

 • ஆரூர் ரங் -

  காங்கிரசில் உயர்மட்டக் குழுவிலிருந்தபோது தான் கேரள கம்யூனிஸ்டு அரசு மத்திய காங்கிரஸ் அரசால் கலைக்கப்பட்டது. காமராஜர் அதனை நியாயம் என்று கூறவில்லையா? இப்போது அதே காமராஜர் மீது கம்மிகளுக்கு என்ன திடீர் பாசம்?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இதே போல வெங்காய பொம்மை இராமசாமி எழுதிய "மரண சாசனத்தை" இந்துக்கள் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் வினியோகிக்க வேண்டும். அனைத்துக்கோவில்களிலும் கொடுக்கலாம். நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி சிலைகளின் கீழ் பதாதைகளாக வைக்கலாம். இந்துக்களின் வீது வெறுப்பை உமிழும் திராவிடத்துக்கு சாவு மணி அடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்