Load Image
dinamalar telegram
Advertisement

ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம்: லாலு குடும்பம் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிக்கை

Tamil News
ADVERTISEMENT
பாட்னா : ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்கு, நிலங்களை லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த, 2004 - 09ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வேயில், 'டி' பிரிவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

Latest Tamil News

இந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களிடம், வேலை தருவதாக கூறி, அதற்கு லஞ்சமாக நிலங்களை மிக குறைந்த விலைக்கு பெற்றதாக, லாலு பிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

பணி நியமனம் பெற்றவர்களை தேர்வு செய்ததில், லாலு மகன் தேஜஸ்விக்கு முக்கிய பங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பீஹார் தலைநகர் பாட்னாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சதுர அடி நிலங்கள், மிக குறைந்த விலைக்கு, லாலு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து இந்த வழக்கில் இன்று லாலு பிரசாத் யாதவ், இவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி உள்ளிட்ட 15 பேர் மீது சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.,


வாசகர் கருத்து (10)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    எப்படி இயற்க்கை விட்டுவைத்துள்ளது ? சர்க்கரை நோய் , ப்ரெஷர் என்று ஒன்றும் செய்யவில்லையா?

  • Raj - Chennai,இந்தியா

    ஏன் இத்தனை வருடங்களாக CBI கோமாவில் இருந்ததா, அப்போ அடுத்த குற்றபத்திரிகை 2030 இல் இருக்கலாம், CBI speed அந்த மாதிரி.

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

      தேர்தல் வந்தால் சுறுசுறுப்பாகி விடுவார்கள். தேர்தல் முடிந்தவுடன் கோமாவுக்கு போய்விடுவார்கள்.

  • sankaseshan - mumbai,இந்தியா

    ரமேஷ் போன்றோரின் அஆதரவு இருக்கும் பொது லாலு விற்கு ஒரு கவலையும் இல்லை

  • Raj Sudarsanam - North Carolina,யூ.எஸ்.ஏ

    திருப்பி கொடுத்துட்டா புண்ணியவான் ஆகிடலாமே... இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா... ஆனா நம்ம நாட்டுல தான் ஒரு சில குடும்பம் மட்டும் எந்த வேலையும் செய்யாம அடுத்தவன் காச அடிச்சி பிடிங்கி சந்தோஷமா இருக்காங்க... போதா கொறைக்கு அதானி, அம்பானி னு சொல்லி மக்களை ஏமாத்தறாங்க

  • canchi ravi - Hyderabad,இந்தியா

    லாலு Enna செய்தாலும் உத்தமர் என்கிறார்களே எதிர்க்கட்சியினர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்