Load Image
dinamalar telegram
Advertisement

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இரு காங்., எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு

Tamil News
ADVERTISEMENT
போபால்: மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் 32 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மத்தியபிரதேச மாநிலம் தாமோக் மாவட்டம், தாமோக் ரயில் நிலையத்திற்கு ரிவான்ஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுனில் ஷரப், சித்தார்த் குஷ்வாகா என்ற இரு எம்.எல்.க்கள் ஏறினர். இருவரும் மது அருந்தியிருந்ததால் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.Latest Tamil News

இவர்கள் முன்பதிவு செய்யாத ஏசி வகுப்பில் ஏறியுள்ளனர். ரயில் புறப்பட்டு தாமோக் - கட்னி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ரயிலில் 32 வயது பெண் தனது குழந்தையுடன் தனியாக பயணித்துள்ளார். அவரிடம் இரு எம்.எல்.ஏ.க்களும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக தனது கணவருக்கு மொபைல் போன் மூலம் தெரிவித்தார்.


உடன் அப்பெண்ணின் கணவர் ஜபல்பூர் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே அமைச்சக டுவிட்டரிலும் பதவிவேற்றினார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அடுத்த ரயில் நிலையம் வந்த போது இரு எம்.எல்.ஏ.க்களையும் பிடித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்' .


வாசகர் கருத்து (21)

 • எவர்கிங் -

  எல்லாம் விவாதம் நடத்தது என்று பார்ப்போம்

 • Girija - Chennai,இந்தியா

  இந்துக்கள் மற்றும் இந்து மதத்தின் மேல் அவ்வளவு வெறி ? பாதிக்கப்பட்ட பெண் ஒரு வேளை கிருத்துவராக இருந்தாலும், கயவர்கள் பி ஜெ பி யாக இருந்தாலும் நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம். இதுபோன்ற நிகழ்வுகளில் எங்கள் மனிதாபிமானம் தான் இருக்கிறதே தவிர, மத மாற்றம், அரசியல் என்ற நோக்கங்கள் இல்லை. நாளைக்கு நீங்களே நான் இந்து மதத்திற்கு மாறுகிறேன் என்று வந்தாலும் நாங்கள் ஏற்கமாட்டோம். பிறப்பால் மட்டுமே ஒருவர் / ஒருத்தி இந்துவாக பிறக்கமுடியும். இந்த கொள்கைக்கு என்றும் மாற்றமே கிடையாது, இது என்றுமே மாறாதது.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இது தனிப்பட்டவர்களின் ஒழுக்கக்கேடு. இதில் கட்சியை எதற்கு இழுக்கிறீர்கள். ஆனால் பிஜேபி யில் எப்போதோ இருந்து இப்போது செயல்படாதவர்களாக இருந்தாலும் "பிஜேபி பிரமுகர்" என்று தலைப்புச்செய்தி வெளியிடுவார்கள் தமிழக மீடியாக்கள். ஒரு நாள் விவாதம் கூட எல்லா டீவி யிலும் நடக்கும்.

 • RAAJAA -

  படத்தில் உள்ள பச்சை நிற Electric Locomotive WAG9 MODEL . ZOOM செய்து பார்த்தால் தெரியும். இந்த லோகோ சரக்கு ரயில பெட்டிகளை இழுத்துச் செல்ல தயாரிக்கப் படுகிறது. அதிகபட்ச வேகம் 100 KM மட்டுமே செல்லும். WAG9 என்பதில் W என்றால் WIDE அதாவது Broad Guage .... A லெட்டர் AC கரண்ட் G என்பது Goods Traffic 9 என்பது 9th generation......இதை passenger Train க்கு ஓட்ட மாட்டார்கள். WAP model மட்டுமே passenger ரயிலுக்கு உபயோகிப்பர். அதாவது Wide Alternate current Passenger Loco. இதிலும் பலவித மாடல்கள் உண்டு. WAP5 WAP 7 WAP9 ....140 KM SPEED வரை செல்லக்கூடியவை. எல்லாவற்றுக்கும் வேறு வேறு கலர்கள் உண்டு. அது போல் டீசல் லோகோவுக்கு WDG. WDP என்ற குறியீடுகள் உண்டு. 17 பெட்டிகளை இயக்கக் கூடிய Loco மற்றும் 21 பெட்டிகளை இழுக்கக் கூடிய Loco வின் திறன்கள் வேறுபடும். அது போல் 50 க்கும் மேற்பட்ட Goods வேகன்களை இழுக்கக் கூடிய Loco வின் இழுவைத் திறன் மாறுபடும்.

 • Raj Sudarsanam - North Carolina,யூ.எஸ்.ஏ

  இது பி ஜே பி யின் சூழ்ச்சினு சொல்லிட்டா போச்சு... மஹான் ஆகிடலாம்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்