Load Image
dinamalar telegram
Advertisement

ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி!: தேர்தல் கமிஷன் பரிந்துரை?

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியாவில் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் கமிஷன் கணிசமான தொகையை செலவிட்டு வருகிறது. இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அதற்கும் தனியாக செலவு செய்து வருகிறது. தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்பு ஊதியம், பாதுகாப்பு உள்ளிட்டவை காரணமாக கோடிக்கணக்கான ரூபாய்கள் மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவிடப்படுகிறது.

Latest Tamil News
அதிலும், சில வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிப்பெற்றால் ஏதேனும் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்துவிடுகின்றனர். இதனால், அந்த தொகுதி காலி என அறிவிக்கப்பட்டு அடுத்த 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இதன் காரணமாக இரு தொகுதியில் போட்டியிட்டு வென்று, அதில் ஒன்றை ராஜினாமா செய்தால் அந்தத் தொகுதியில் ஏற்பட்ட செலவை வேட்பாளரே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இது தொடர்பான பரிந்துரையை ஏற்கனவே இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.


மேலும் 33 (7) மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அரசியல்வாதிகள் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற விதியை செயல்படுத்தலாம் எனவும் தேர்தல் கமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வாசகர் கருத்து (16)

  • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

    விரைவில் ஆதார் கார்டை வாக்காளர் அட்டையோடு இணைக்கும் முடிக்கப்படவேண்டும். இல்லையென்றால் திமுக போன்ற ஈனக்கட்சிகள் தங்களுக்கு தானே வோட்டுப்போட்டுக்கொள்ளும்

  • sampath - doha,கத்தார்

    எந்த நாட்டிலேயும் இல்லாத ஒரு கோமாளித்தனமான தேர்தல் இந்தியாவுல மட்டும்தான் இருக்குது , ஒருத்தன் இரண்டு இடத்தில நிற்பானாம் இரண்டும் ஜெயிச்சிட்டா ஒண்ண ராஜினாமா செய்வானாம் அந்த இடத்துக்கு திரும்பவும் தேர்தல் வைப்பானுங்களாம் பொதுப்பணத்தை இப்படி வெட்டியா தெரிஞ்சே செய்யறதுக்கு எப்படி எல்லாரும் சம்மதிக்கிறாங்க , இப்பவாவது புத்தி வந்து சரி செய்யுங்க அதுவும் மோடி வந்ததால் இது நடக்குது

  • krish - chennai,இந்தியா

    வரவேற்கப்படவேண்டிய முடிவு. விதிகள் திருத்தி அமைக்கப்பட்டால் , மீறப்படாமல் இருக்க அரசியல்வாதிகள் முழு ஒத்துழைப்பு ( in letter and spirit) தேவை.

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    முதலில் வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யுங்கள் ஜனநாயகம் காக்க சிறந்த வழிமுறை அதுவே. அதுபோல் ஒரு கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் வேறு கட்சிக்கு ஆதரவளிக்க கூடாது என்றும் அப்படி ஆதரவளிக்கும் பட்சத்தில் அவரின் உறுப்பினர் பதவி செல்லாது என்றும் ராஜினாமா செய்தால் அடுத்த பத்தாண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் நிற்க தடை விதிக்க ஆவண செய்யுங்கள்.

    • ஆரூர் ரங் - ,

      வாக்குச்சீட்டு முறையில் கொத்துக்கொத்தாக முத்திரையிட்டு வாக்குப் பெட்டிக்குள் கள்ள ஓட்டு திணித்த வரலாறு மறக்காது.

    • Aarkay - Pondy,இந்தியா

      இன்னமும் ஒரு படி மேல் போய் சிக்கி முக்கி கல்தான் வேண்டும் என்று கூட சொல்லலாமே கழகங்கள் என்னவோ நேர்மையாய் ஜெயித்து வந்தவை போல செம காமெடி

  • Mohan - Thanjavur ,இந்தியா

    இப்ப சொல்லுங்க. மனு தாக்கல் செய்யும்போது உட்டுடுங்க. ஹையோ ஹையோ.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்