Load Image
Advertisement

ராகுல் வரவேற்பு பேனரில் சாவர்க்கர் படம்

 ராகுல் வரவேற்பு பேனரில் சாவர்க்கர் படம்
ADVERTISEMENT
மாண்டியா: கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டுவரும் காங்கிரஸ் எம்.பி., ராகுலை வரவேற்று அக்கட்சியினர் வைத்துள்ள பேனரில் சாவர்க்கர் படம் இடம்பெற்றது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே கேரளாவிலும் சாவர்க்கர் படத்துடன் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை ஆர்எஸ்எஸ், பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் புகழ்ந்து பேசுவது வழக்கம். அதேநேரத்தில், காங்கிரசார் சாவர்க்கரை அடிக்கடி விமர்சனம் செய்வதும் வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது காங்கிரசும் சாவர்க்கரின் புகைப்படத்தை தங்கள் கட்சியின் நிகழ்வுகளில் பயன்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி., ராகுல் தற்போது ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.


அதில் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் ராகுல் நடைபயணத்தின்போது அவரது வருகையை ஒட்டி ராகுலை வரவேற்க வைக்கப்பட்ட பேனரில் அபுல் கலாம் ஆசாத், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோர் புகைப்படங்களுடன் சாவர்க்கரின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில், சாவர்க்கர் படம் இருந்த இடத்தில் மஹாத்மா காந்தியின் படம் மாற்றப்பட்டது.

Latest Tamil News
இப்போது, ராகுல் கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று என்பதாலும் அடுத்தாண்டு இங்குத் தேர்தல் நடைபெறுவதாலும் ராகுலின் நடைபயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பல இடங்களில் பெரிய அளவில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பேனரில் சாவர்க்கரின் படம் மீண்டும் இடம்பெற்றுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மாண்டியாவில் உள்ள இந்த பேனரில் ராகுல், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், சித்தராமையா ஆகியோரின் படங்களுடன் சாவர்க்கர் படமும் இடம் பெற்றுள்ளது.


இந்த பேனரை சாந்தி நகர் காங்., எம்.எல்.ஏ நலபாட் அகமது ஹரீஸ் வைத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதனை மறுத்துள்ள நலபாட் அகமது ஹரீஸ், ‛சில அந்நிய சக்திகள் வேண்டுமென்றே எனது பெயரைப் பயன்படுத்தி இப்படி பேனரை வைத்து உள்ளனர். இது தொடர்பாக மாண்டியா போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன்' எனக் கூறினார். மேலும், பேனரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (23)

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  மோடிக்கு மச்சம்யா. பப்பு உள்ள வரை அசைச்சுக்க முடியாது.

 • எவர்கிங் -

  யாத்திரையில் நேற்று 10 நிமிடம் கலந்து கொண்ட இடைக்கால தலைவரை காணவில்லை என அருகேயே உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துடுங்க Khan-cross boys....

 • s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்

  பா.ஜ.க வளர்ச்சிக்கு ராகுல் காந்தியின் பங்கு மிக அதிகம்

 • Aarkay - Pondy,இந்தியா

  சவார்க்கரை இழிவு படுத்த யாரோ செய்த செயல் இது. பப்புவுடன் வேண்டுமானால் இன்னொரு மொக்கை படம் இருக்கலாம்.

 • DVRR - Kolkata,இந்தியா

  ரவுல் வின்சி அலையாஸ் ராகுல் காந்தி அலையாஸ் பப்பு தி கிரேட் நடைப்பயணத்துக்கு எப்படி எல்லாம் வியபாரம் தேடுகின்றார்கள்??? 1) சோனியாவும் ராகுல் காந்தியுடன் நடை பயணம் 2) சோனியாவின் Shoe Lace பப்பு தி கிரேட் கட்டிவிடும் வீடியோ 3) வீர் சாவர்க்கர் படம் போட்டு இதை செய்தது பிஜேபி தான் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை தடை செய்யும் நோக்கில். இதை எல்லாம் பார்க்கும் கேடு கெட்ட ரூ 200 டாஸ்மாக் சரக்கு பிரியாணிக்காக எதற்கும் வாழ்க இல்லை ஒழிக என்று சொல்லும் மக்கள் கூட்டம் இதை பார்த்து மயங்கி ஒட்டு போட்டுவிடும் என்ற தொனியில் இந்த தகிடு தத்தங்கள் நடக்கின்றது முஸ்லீம் நேரு காங்கிரஸினால்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்