ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி-முத்துமாரியம்மன் திருக் கோவிலில் நவராத்திரி பத்தாம் நாளையொட்டி, அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி நிகழ்ச்சியை யொட்டி, கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து தினமும் உற்சவர் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நவராத்திரி 10ம் நாளையொட்டி கோவிலுக்கு முன்பு அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. அர்ச்சகர் கேசவ ஐயங்கார் வாழைமரத்தில் அம்பு எய்தினார். தொடர்ந்து, உற்சவர் மாரியம்மன் மகிஷாசுரமர்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!