Load Image
Advertisement

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

 தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி
ADVERTISEMENT
பாங்காக்: தாய்லாந்தில் குழந்தைகள் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தது அந்நாட்டில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் முன்னாள் போலீஸ்காரர் என தெரியவந்துள்ளது. அவர் கடந்தாண்டு தான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த குழந்தைகளில் சிலருக்கு 2 வயதுக்கு குறைவே உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


துப்பாக்கிச்சூடு நடக்கும் போது, அங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்துள்ளனர். மதிய நேரத்தில் அங்கு வந்த முன்னாள் போலீஸ்காரர், ஆசிரியை உள்ளிட்ட சில ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் உயிரிழந்த ஆசிரியை 8 மாத கர்ப்பிணி ஆவார்.




Latest Tamil News

மற்ற நாடுகளை காட்டிலும் தாய்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அங்கு துப்பாக்கிச்சூடு என்பது அரிதான ஒன்றாக இருந்து வந்த நிலையில், இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் உயிரிழந்தது, அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


வாசகர் கருத்து (9)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் உயிரிழந்தது, அந்நாட்டு மக்களை மட்டும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை. உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது. கடவுளே ஏன் இப்படி எல்லாம் உலகில் சில பகுதிகளில் நடக்கிறது. மக்கள் பொறுமை இழந்துவிட்டார்களா? இதற்கு என்னதான் முடிவு கடவுளே? ஒருவேளை கலியுகம் முடிவுக்கு வருகிறதா?

  • நாசிர் உசைன் - தமிழன்டா - Singara Chennai,இந்தியா

    .....

  • Thamizhan - Doha,கத்தார்

    மர்மநபர் என்று போடுங்க.....

  • thangam - bangalore,இந்தியா

    'அமைதி'யான வழியில் அகிம்சை போராட்டம் மேற்கொண்டவர்வேறு யாராக இருக்க முடியும்.. ??

  • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

    துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி என்ன மார்க்கமோ .. கொந்தளிக்காதீங்க பிரன்ஸ் .. இப்பெல்லாம் பெயர் இல்லை / தெரிவிக்க இயலவில்லை என்றால் அநேகமாக அவர்களேதான் ஈடுபட்டு இருப்பார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement