Load Image
dinamalar telegram
Advertisement

வானில் ஒரு மின் விமானம்

Tamil News
ADVERTISEMENT
உலகின் முதல் மின்சார பயணியர் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்து வெள்ளோட்டம் பார்த்தது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் நடந்த, இவியேஷன் நிறுவனத்தின், 'ஆலிஸ்' என்ற மின்சார விமானம், வானில் 3,500 அடி உயரத்தில் எட்டு நிமிடம் வெள்ளோட்ட சோதனை நடத்தி, மீண்டும்தரையிறங்கியது.


இவியேஷனின் ஆலிஸ், ஒரு முறை மின்சாரமேற்றினால், 250 மைல்கள் தொலைவுக்கு பறக்கும். அதுமட்டுமல்ல, ஆலிஸ் விமானத்தில், இரண்டு விமானிகளும், ஒன்பது பயணியரும் பயணிக்கலாம்.

பேட்டரி தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருவதால், விரைவில் மின்சார விமானங்கள் மட்டுமே வானில் பறக்க வேண்டும் என்ற நிலை வரும். அப்போது, முதல் விமானமாக இவியேஷனின் ஆலிஸ் இருக்கும். ஏற்கனவே, நடுத்தர தொலைவு விமான சேவைகளுக்காக, 70 ஆலிஸ் விமானங்களுக்கு ஆர்டர்கள் வந்துள்ளன. இதனால், 2026 வாக்கில் பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவையில் ஆலிஸ் முன்னணி வகிக்கும் என, வல்லுனர்கள் கருதுகின்றனர்.


வாசகர் கருத்து (3)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    2021 லேயே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முழுவதும் பாட்டரியில் இயங்கக்கூடிய விமானத்தை சோத்துப்பார்த்து விட்டது.

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    வாழ்த்துக்கள் மக்களே

  • sankar - சென்னை,இந்தியா

    இந்த விமானம் தயாரித்தவர்கள் மனித தேய்வங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement