ராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள்

வட மாநிலங்களில் தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். தசரா நிறைவு நாளன்று ராவணன் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து கொண்டாடுவர். ஆனால், மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள சங்கோலா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தசரா பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுகின்றனர்.
இவர்கள் ராமர், லட்சுமணன், சீதையை வழிபட்டாலும், பண்டிகையின் இறுதி நாளன்று ராவணன் உருவ பொம்மையை தீயிட்டு எரிப்பது இல்லை. அதற்கு பதிலாக ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபடுகின்றனர்.

ஆண்டுதோறும் அரங்கேறும் இந்த வித்தியாசமான கொண்டாட்டம் குறித்து கிராம மக்கள் கூறியதாவது:ராவணனின் புத்திசாலித்தனம் மற்றும் ஆன்மிக பக்தி ஆகிய குணங்களுக்காக, அவரை வழிபடும் பாரம்பரியம் எங்கள் கிராமத்தில் 300 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ராவணனின் ஆசீர்வாதத்தால் எங்களின் வாழ்வாதாரம் செழிப்பாக இருப்பதாகவும், மகிழ்ச்சியும், அமைதியும் நீடிப்பதாகவும் நம்புகிறோம். அதனால் தான் ராவணனின் உருவ பொம்மைக்கு ஆரத்தி எடுத்து வழிபடுகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (7)
ராவணன் இறப்பதற்கு முன் ராமரே லட்மணனிடம் ரவணனிடம் அறிவுறை பெறுமாறு சொல்லுவார். இதனால் தசராவில் ராவணின் உருவ பொம்மையை எரிக்காமல் இருக்கலாம். புகையும் குறையும்
சங்க இலக்கியத்தில் இலங்கை தென்னாட்டின் கீழ் இருந்தது என்கிறது.
இந்து தர்மத்தில் ராவணனை வழிபடுவது தவறில்லை. ராவணன் மிகச்சிறந்த சிவபக்தன் என்பதை மறந்துவிடக்கூடாது, இல்லையெனில் பத்து தலையோடு ராமனை எதிர்கொள்ளும் வரம் வாங்கியிருக்க முடியாது. வாங்கிய வரத்தை நல்ல விசயத்துக்கு பயன்படுத்தாமல், யாரும் என்னை வெல்லமுடியாது என்ற அவனது தலைகனமே ராவணனை அழித்தது என்பது வரலாறாகிவிட்டது. அவன் செய்த ஒரே தவறு, தேவலோகத்திலிருந்து யாரும் என்னைக்கொல்லகூடாது என வரம்வாங்கியது, ஆனால் அவன் துச்சமாக மதித்த மனித உருவில் ராமன் வந்து ராவணனை அழித்தது இராமாயண காவியமாகிவிட்டது.
இராவணனை பாட்டுடைத் தலைவனாக வைத்து தூய தமிழில் புலவர் குழந்தை என்பவரால் இராவண காவியம் என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. இராவணனின் புகழ்பாடும் இந்த ஒரே நூல். தமிழண்டா.