ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று மாநிலத்தின் பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள், முப்படை வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: முன்பு, பயங்கரவாதிகளின் மையமாக இருந்த இந்த பகுதி, தற்போது சுற்றுலா மையமாக மாறியுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக முப்தி மற்றும் அப்துல்லா , அவரது மகனும் ஆட்சி செய்தனர். ஆனால், வீடில்லாத ஒரு லட்சம் பேருக்கு வீடு வழங்க எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. ஆனால், தற்போது 2014 - 22 வரை அவர்களுக்கு, மோடி ஆட்சியில் வீடு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் காஷ்மீர் மக்களின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை.
மோடி மாடல் நிர்வாகத்தில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. குப்கர் மாடலானது, இளைஞர்களின் கைகளில் கற்களும் துப்பாக்கியும் தான் கொடுக்கப்பட்டன. மோடி மாடலுக்கும், குப்கர் மாடலுக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவு பெற்ற உடன் காஷ்மீரில் சட்டசபை தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படும்.

கடந்த ஆண்டுகளில் காஷ்மீர் மாநிலம் வளர்ச்சியில் பின் தங்கியிருந்தது. ஆனால் 3 குடும்பத்தினர் மட்டுமே பலன்பெற்றுள்ளன. ஆனால், அரசின் திட்டங்கள் மூலம் ஏழைகள் பயன்பெறுவதை மோடி உறுதி செய்துள்ளார். காஷ்மீர் முதலீட்டில் பெரிய பயன்பெற்றுள்து. 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பயங்கரவாதத்தால் யாரும் இங்கு நன்மை பெறவில்லை. 1990 முதல் காஷ்மீரில் பயங்கரவாதம் காரணமாக 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சிலர் சொல்கின்றனர். பாகிஸ்தானுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். காஷ்மீர் மக்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம். மோடி அரசு, பயங்கரவாதத்தை பொறுத்து கொள்ளாது. அதனை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாட்டிலேயே மிகவும் அமைதியான மாநிலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மாற்ற விரும்புகிறோம்.
சிலர் பாகிஸ்தான் குறித்து பேசி வருகின்றனர். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எத்தனை கிராமங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர்கள் பதில் சொல்ல வேண்டும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளில், காஷ்மீரில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
வாசகர் கருத்து (6)
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
ஆனால் சீனாவுடன் தோல்வி மேல் தோல்வி என்றாலும் நூற்றுக்கணக்கான பேச்சு வார்த்தைகள் நடத்துவோம்.
எந்த பழைய கற்காலத்திலோ, அதிகம் படிக்காத மக்களும், அடிமைகளும் நிறைந்திருந்த காலத்தில் படிக்காத பாமர மக்களின் பாதுகாப்புக்காகவும், ஏமாற்றுபவர்களிடமிருந்து பாதுகாக்கவும், அரபு நாடுகளில் இறைத்தொண்டர்களும் ,சற்று நியாயமான ஆட்சியாளர்களும் கொண்டுவந்த சட்ட திட்டங்கள் அந்த கற்கால,அடிமைகள் வாழ்ந்த காலகட்டத்திற்கு ஒத்து வந்தன. தற்சமயம் முழுமையான வெளிப்படையான சமுதாயம் அமைந்து மக்களாட்சி நடைபெறுகிறது. மக்கள் நன்றாக வாழ புதிய வாய்ப்புகளும், எண்ணங்களும் துணையாக உள்ளன. இந்த காலகட்டத்தில் ஆணின் அடிமையாக பெண்ணை இருத்திவைக்க நினைப்பதும் படிப்பு, மற்ற கலைகளை கற்று மேலே சிறப்பு பெற முயல்வதைதடுப்பதும் ,ஒரு நாலாந்தர குடிமக்களாக அவர்களை நிலை நிறுத்துவது மிகவும் கேவலம். மூளை சலவை செய்யப்பட்ட மிஷின்களாக மாற்றிய முஸ்லீம் சட்டங்களை இந்த புது யுகத்துக்கு தக்கவாறு மாற்ற முயற்சிக்க வேண்டும். இல்லாவிடில் பெண்கள் குழந்தை பெறும் மிஷின்களாகவும் ஆண்கள் கோபக்கார,சகிப்புத்தன்மை சிறிதும் இல்லாத வெறுப்பு உமிழும் இல்லாத சண்டைக்காரர்களாகவும் இருந்து மற்ற எல்லோரையும் துன்புறுத்தவாறு இருப்பர். முஸ்லீம் தனி சட்டத்தில். புதிய. திட்டம் தேவை என்பது புரிய வைக்கப்பட வேண்டும். இதை முன்னெடுப்பவர்கள் சமுதாயத்திற்கு நன்மை செய்தவர்கள் ஆக சரித்திரத்தில் இடம் பெறுவர்.
எப்போது பிஜேபியின் காய் வோங்குமோ அப்போது
ஆம், பேச்சு வார்த்தை நடத்தவே முடியாது. ஏன் என்றால், பேச்சு வார்த்தை நடத்தும்போதே நம் மீது குண்டு வீசுவார்கள் - ஒரு புறம். மறுபுறம் - சந்தடி சாக்கில் தீவிரவாதிகள் இந்தியாவுக்கு உள்ளே புகுந்து விடுவார்கள் - குண்டு வீச.