ADVERTISEMENT
சேலம்: திமுக ஆட்சியில் மக்களுக்கு நிம்மதியில்லை. துன்பமும், வேதனையும் அனுபவித்து வருகின்றனர் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் அமமுக.,வினர் பழனிசாமி முன்னிலையில், அதிமுக.,வில் இணைந்தனர். பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுக பொது செயலாளர் குறித்து சிலர் மேல்முறையீடு செய்திருந்தனர். உச்ச நீதிமன்றத்தில் எங்களது வழக்கறிஞர்கள் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கவில்லை என தெரிவித்தனர். இதனை கேட்ட நீதிபதி, விசாரணை முடியும் வரை பொதுக்குழு கூட்டம் நடத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். மற்றபடி தடை பிறப்பிக்கவில்லை .பொதுச்செயலாளர் அறிவிப்பும் நாங்கள் வெளியிடவில்லை.
![Latest Tamil News]()
ஆனால் கோவையில் 133 வேலைகளுக்கு 11 முறை டெண்டர் அறிவித்துள்ளனர். ஆனால் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. காரணம் கமிஷன் அதிகம் கேட்பதாக தெரிவிக்கின்றனர். திமுக ஆட்சியில் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளது. 2021ம் ஆண்டு பொது தேர்தலில் தேர்தல் வாக்குறுதிகள் திமுக எதையும் நிறைவேற்றவில்லை.
மின் கட்டணம் உயர்த்தி இருக்கிறார்கள். 50 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது .சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கடைகளுக்கும் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. மக்கள் நிம்மதியாக இல்லை. துன்பமும் வேதனையும் அனுபவித்து வருகிறார்கள்.
திமுக தேர்தல் அறிக்கையில் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்வோம் என தெரிவித்திருந்தனர் .ஆனால் இதுவரை ரத்து செய்யப்படவில்லை . அதிமுக ஆட்சியில், காவிரி பிரச்னையில் பார்லிமென்டில் குரல் கொடுத்து போராடினோம். ஆனால் திமுகவினர் நீட் தேர்விற்கு எந்த குரலும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு பழனிசாமி கூறினார்.

திமுக ஆட்சி மெத்தனமாக நடந்து வருகிறது. அதிமுக திட்டப்பணிகளை திறந்து வைத்து வருகிறார்கள். பெரிய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நாங்கள் 11 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தோம். அதை திறந்து வைத்துள்ளனர். சட்ட கல்லூரி கொண்டு வந்தோம் .அதை திறந்து வைத்து வருகிறார்கள் முடிவுற்ற பணிகளைத்தான் திறந்து வைக்கிறார்கள் . பாலங்களை திறந்து வைக்கிறார்கள்.

ஆனால் கோவையில் 133 வேலைகளுக்கு 11 முறை டெண்டர் அறிவித்துள்ளனர். ஆனால் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. காரணம் கமிஷன் அதிகம் கேட்பதாக தெரிவிக்கின்றனர். திமுக ஆட்சியில் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளது. 2021ம் ஆண்டு பொது தேர்தலில் தேர்தல் வாக்குறுதிகள் திமுக எதையும் நிறைவேற்றவில்லை.
மின் கட்டணம் உயர்த்தி இருக்கிறார்கள். 50 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது .சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கடைகளுக்கும் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. மக்கள் நிம்மதியாக இல்லை. துன்பமும் வேதனையும் அனுபவித்து வருகிறார்கள்.
திமுக தேர்தல் அறிக்கையில் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்வோம் என தெரிவித்திருந்தனர் .ஆனால் இதுவரை ரத்து செய்யப்படவில்லை . அதிமுக ஆட்சியில், காவிரி பிரச்னையில் பார்லிமென்டில் குரல் கொடுத்து போராடினோம். ஆனால் திமுகவினர் நீட் தேர்விற்கு எந்த குரலும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு பழனிசாமி கூறினார்.
வாசகர் கருத்து (26)
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?
எடப்பாடி ,போராட்டங்கள் ன்றும் செய்வதில்லை. மக்கள் அதிமுகவை மறந்து விடுவார்கள். ரயில் மறியல்,பஸ் மறியல் ,சாலை மறியல் எல்லாம் செய்து திமுக ஜெயித்தனர்.
உண்மை தான் உங்களுக்கு தினமும் நிம்மதி இல்லாத ராத்திரி தான் .உள்ளே போகப்போவது கோடநாடு வழக்கிலா அல்லது ஊழல் வழக்கிலா அல்லது இரண்டிலுமா என்று ஒவொரு நிமிடமும் பயம் வரும் பொது உங்களுக்கு எப்படி இந்த ஆட்சி நிம்மதியாக இருக்கும்.
உங்க ஆட்சியில் ஹிந்துக்களுக்கு ஒரு மரியாதை இருந்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஆட்சியில் இருக்கும்போது மட்டும் மக்களின் அவலங்கள் புரிவதில்லை. இல்லாதபோது ஒரே முதலைக்கண்ணீர்தான். குண்டும் குழியுமான சாலைகள், ஊழல், லஞ்ச லாவண்யம், எந்த திட்டங்களும் இல்லாத நிலை, நிதிநிலையை மோசமாக்கியது, அவ்வப்போவது கண்துடைப்பு இலவசங்கள் இப்படித்தானே இருந்தது உங்கள் ஆட்சி.