'பொன்னியின் செல்வன்' திரைப்படம் எடுக்கப்பட்டது முதல் சோழர்களின் வரலாறு குறித்த தேடல் அதிகரித்துள்ள நிலையில், ராஜராஜ சோழன் வெளியிட்ட அரிய தமிழ் நாணயம் கிடைத்துள்ளது, சோழர்களின் வரலாற்றில் புதிய திருப்பமாகி உள்ளது.
சோழ மன்னர்களில் மிகவும் வலிமையானவராகவும், கிழக்காசிய நாடுகளையும், வட மாநிலங்களையும் வெற்றி பெற்ற பேரரசனாகவும் விளங்கியவர் ராஜராஜன். அவர், 1,000 ஆண்டுகளுக்கு முன் அவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள், சோழர்களின் கட்டடக் கலைக்கு சான்றுகளாக உள்ளன.ராஜராஜனின் காலத்தில், பல்வேறு பட்ட பெயர்களில் தங்கம், வெள்ளி, செம்புக் காசுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

அவற்றில், 'நாகரி' எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ராஜராஜன் தன் முதல் போர் வெற்றியைக் குறிக்கும் வகையில், சிறப்பு நாணயம் வெளியிட்டதும், அதில் தமிழிலேயே எழுத்துக்களை பொறித்ததற்கும் ஆதாரமாக தங்க நாணயம் ஒன்று கிடைத்துள்ளது.
தமிழ் எழுத்து
நாணயவியல் ஆய்வாளர் ஆறுமுக சீதாராமன் கூறியதாவது:மும்பை ஓஸ்வால் ஏல நிறுவனம், ஏலம் விடுவதாக ஒரு தங்க நாணயத்தின் புகைப்படத்தை வெளியிட்டது. 'அந்த நாணயம், சாளுக்கிய சோழரான முதலாம் குலோத்துங்கனால் வெளியிடப்பட்டது. அதன் முன்பக்கத்தில் நின்ற நிலையில் மயிலும், பின்பக்கத்தில், தமிழ் எழுத்தில் 'அவனி முழுதுடையான்' என்று வாசகமும் உள்ளது' எனக் கூறி ஏலம் விட்டது.
அந்த ஏல நிறுவனம் வெளியிட்ட தகவல் சரிதானா என்பதை உறுதிப்படுத்தும்படி, சென்னையைச் சேர்ந்த சங்கரன் ராமன், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பீனா சரசன், மும்பையை சேர்ந்த கிரிஷ் வீரா ஆகியோர், நாணயத்தின் புகைப்படத்தை எனக்கு அனுப்பினர். அந்த ஏல நிறுவனம் தெரிவித்த தகவல்கள் ஏதும் அதில் இல்லை. மாறாக, நாணயத்தின் முன்புறத்தில், வலது பக்கம் நோக்கி நிற்கும் சேவல் உள்ளது.சேவலின் முன் 'ம' என்ற தமிழ் எழுத்து உள்ளது. நாணயத்தின் பின் புறத்தில், வட்ட வடிவில், 'கெரளந்தகந்' என, 11ம் நுாற்றாண்டின் சோழர் காலத் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயத்தின் எடை 0.26 கிராம்.
அரிய சான்று
ராஜராஜன், தான் மன்னனாக முடிசூடிய நான்காம் ஆண்டின் தொடக்கத்தில், 'காந்தளூர்ச் சாலை கலமருத்தருளிய கோராஜகேசரிவர்மன்' என தன்னைக் கூறிக் கொள்கிறான். அத்துடன், தன் மெய்க்கீர்த்தியிலும், இப்பெயரையே முதலில் குறிப்பிட்டுள்ளான். அதாவது, ராஜராஜன், கி.பி., 988ல் கேரளாவின் திருவனந்தபுரம் அருகில் உள்ள காந்தளூர்ச்சாலையை வென்றுள்ளான்.ராஜராஜன், சேரநாட்டிற்குச் செல்ல, பாண்டிய நாட்டைக் கடந்தே செல்ல வேண்டியிருந்தது. அப்போது பாண்டியன் அமரபுயங்கன், ராஜராஜனுடன் போரிட்டான். அவனையும் ராஜராஜன் வெற்றி பெற்றான்.
இது, மாமன்னன் ராஜராஜன், தானே தலைமையேற்றுச் சென்று வென்ற பெரும் போராக உள்ளது.கேரள மன்னனை வென்றதால் ராஜராஜன், 'கேரளாந்தகன்' என்ற சிறப்புப் பட்டத்தைச் சூடிக்கொண்டான். இந்த பட்டப் பெயரில், 'கேரளன்' என்பது சேரனையும், 'அந்தகன்' என்பது எமனையும் குறிக்கும்.தன் வரலாற்றின் முதல் வெற்றியை ருசித்து, அதனால் கிடைத்த பட்டத்தை வரலாற்றில் நிலைநிறுத்தும் வகையில், தங்கத்தால் ஆன சிறப்பு நாணயத்தை வெளியிட்டுள்ளான். அதில் முழுக்க முழுக்க, தன் தாய்மொழியான தமிழ் எழுத்துகளை பொறித்துள்ளான். இதுதான், ராஜராஜன் வெளியிட்டுள்ள தமிழ் நாணயத்துக்கான சான்றாகவும், சோழர்களின் நாணய வரலாற்றுக்கான அரிய சான்றாகவும் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் --
வாசகர் கருத்து (26)
திமுக கம்யூனிஸ்ட்ஸ் சிறுத்தைகள் மற்றும் சில குப்பைகள் ..... ஒரு வேளை சோழ மன்னர் என்று பெயரை சூடுவார்கள் போலிருக்கு. திருமா வெற்றிமாறன் போன்ற மற்றும் சில குப்பைகள்-அவருக்கு சோழன் என்று பெயரை சூட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இதில் இருந்து ஒரு மிக பெரிய விஷயம் க்ரிப்டோ வே .. மகன்களின் சதியை முறியடித்துள்ளது தமிழுக்கும் சமஸ்க்ரிதமும் தொடர்பில்லை என்று கம்பு சுத்தும் நவீன (கனி) மொழி வல்லுநர்கள் இதற்க்கு பதில் சொல்லுங்க?/ அந்தகன் என்பது சம்ஸ்கிருத சொல்.. அந்தம் என்பதின் ஒரு வடிவு.. அந்தகன் என்றால் "முடிப்பவன்" என்ற குறிப்பில் யமநை குறிப்பிட இந்த சொல் பயன்படுத்தப்பட்டது.. ஆக ராஜராஜன் என்ற சிவபாத சேகரன் என்ற அருண்மொழி ஏன், எப்பிடி இந்த நாணயத்தில் "கேரளாந்தகன்' என்ற சம்ஸ்கிருத கலப்புடைய "தேவ நகரி" எழுத்து வடிவத்தை உபயோகித்துள்ளான்?? சோழர் காலத்தில் சமஸ்க்ரிதமும், தமிழும், இரு கண்களாக தழைத்து ஓங்கி இருந்தன என்பது தான் உண்மை..இதை வேற்றுமத வந்தேறிகளுக்கு பிறந்த இழிமகன்கள் வாங்கிய காசுக்கும், பிரியாணிக்கும் குரைத்து தங்களின் நன்றியை காட்டுகிறார்கள் இந்த ஈனர்கள் நம்மை கடிக்கும் முன்பு ஒழிக்க படவேண்டியவர்கள்
ராஜா ராஜா சோழன் என்பவர் போர் வீரர் மட்டுமல்ல நிர்வாகியும் கூட தனக்கு முன்பு 300 - 400 ஆண்டுகள் வாழ்ந்த பல்லவ காலத்து கவிஞர்களான சுந்தர அப்பர் மற்றும் பல கவிஞர்களின் பாடல்களை தொகுத்து பிற்கால மக்களுக்கு சேமித்தவர் ராஜா ராஜா சோழன், நம் சென்னை அருகில் இன்று செங்கல்பட்டு ரயில் platform போன்றவற்றினால் பல பகுதிகளை இழந்த இன்றும் இருக்கும் மதுராந்தகம் ஏறி, வீராணம் ஏறி போன்றவை சோழர் காலத்தவை தான்
இவர்கள் படத்தில் காட்டிய ராஷ்ட்ராகுட்டார்கள் என்பவர்கள் சாதாரண ஆட்கள் இல்லை கர்நாடகாவில் இருந்து தற்போதைய உத்தரபிரதேச வரை பறந்து விரிந்த சாம்ராஜ்யம், அந்த கால கட்டத்தில் ரோம் நகரை இஸ்லாமிய caliph தோற்கடித்தனர் அந்த இஸ்லாமிய caliph கல் இந்தியா படையெடுக்க நினைக்கும் பொது அவர்களை தோற்கடித்தவர்கல் ராஷ்டிரகூடர்கள், அந்த ராஷ்டிரகூட படையை தோற்கடித்தவர்கள் தமிழர்கள், நம் சோழர் படை தெற்காசிய படையை மட்டும் தோற்கடிக்கவில்லை வடக்கே உஜ்ஜைன் நகரின் வரை நேரடி சோழர் வரி விதிப்பில் இருந்தது மற்றும் ராஜா போஜ எனும் ராஜ்புட் மன்னன் ஆதரவாக பூர்வ தேசம் எனும் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் வரை படைகள் சென்றன சான்றுகள் இன்னமும் கங்கை கொண்ட சோழபுரத்தில் கல்வெட்டுகளாக உள்ளன, ஒரே ஒரு வேண்டுகோள் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ஒரு பெரிய போர் காட்சியை எடுத்து வைய்யுங்கள், crowd funding கூட பண்ணலாம் மணிரத்னமால் எடுக்க முடியும் என்பது முதல் பாகத்தில் இருந்து நிரூபணம் தேவை நடிகர்களின் அர்ப்பணிப்பு
பொன்னின் செல்வன் படம் ஓடவே ? ஓட்டுங்க நல்ல ஓட்டுங்க