Load Image
dinamalar telegram
Advertisement

நில வரைபட சேவையில் 72 நகரங்கள் மிஸ்சிங்

Tamil News
ADVERTISEMENT



சென்னை : நகர நில அளவை வரைபடங்களை, இ - சேவையில் பெறும் திட்டத்தில், 16 மாவட்டங்களில், 72 நகரங்கள் விடுபட்டுள்ளதாக, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழகத்தில் நிலம் தொடர்பான பட்டா, சிட்டா, நில அளவை வரைபடங்களை, பொது மக்கள் வீட்டில் இருந்தபடியே, இணையதளத்தில் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' என்ற பெயரில், இதற்கான இணையதள சேவை செயல்பட்டு வருகிறது.இதில், நகர நில அளவை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் பட்டா விபரங்கள், நில வரைபடங்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவியது.


Latest Tamil News
இணையதளம் வாயிலாக, இந்த வரைபடங்களை, பொது மக்கள் பதிவிறக்கம் செய்யும் புதிய திட்டம், சமீபத்தில் துவங்கப்பட்டது.இதில் தங்கள் நில வரைபடம் கிடைக்குமா என்று ஆர்வத்துடன், இ - சேவை இணையதளத்தை பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. குறிப்பிட்ட சில நகரங்களின் நில அளவை வரைபடங்கள் மட்டுமே கிடைக்கின்றன.


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட, 16 மாவட்டங்களின், 72 நகரங்கள் விடுபட்டுள்ளன. சென்னையில் மட்டும், 26 பகுதிகள் விடுபட்டுள்ளதாக, வருவாய் துறை தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து (7)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    அப்பா ஆர்யா சாதி இன்னும் தொடர்கிறது என்று ஒப்புக்கொண்ட ஓசிமணக்கு நன்றி

  • duruvasar - indraprastham,இந்தியா

    எதில் தேடினாலும், எப்படி தேடினாலும் கிடைக்காதது முரசொலி மூலமந்திரம் அடுத்து கிடைக்காதது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு. கூகுள் மேப்பில் திராவிட நாட்டில் ஆங்காங்கே "ஓசி" பஸ்கள் ஓடுவதை பார்க்கமுடிகிறது.

  • suresh kumar - Salmiyah,குவைத்

    72 நகரங்களும் 'சிட்டிசன் பட அத்திப்பட்டு' அளவுதானோ என்னவோ?

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    72 நகரங்களின் ப்ரைம் ரியல் எஸ்டேட் பகுதிகள் த்ராவிஷர்களால் 50 வருடங்களாக ஆக்ரமிக்கப்பட்டு எல்லைகள் சிதைக்கப்பட்டு விட்டன. வருவாய்த்துறையின் எஃப்எம்பி மேப்புக்கும் அந்தப் பகுதிகளின் அமைப்புக்கும் சர்வே எண்ணுக்கும் சம்பந்தமே இருக்காது. தனக்குத் தானே சூனியம் வெச்சுக்க முடியாதே? ரெகார்ட்ஸ் டெஸ்ட்ராய்டு. அம்புடுதேன். த்ராவிஷம் வெல்கிறது.

  • Muraleedharan.M - Chennai,இந்தியா

    வாரிசு உரிமையில் பகுதி எண் 114 வேலை செய்ய வில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்