Load Image
dinamalar telegram
Advertisement

தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா

Tamil News
ADVERTISEMENTமதுரை : தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை உட்பட தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.


தென் மாவட்டங்களை சேர்ந்த பலர் தொழில், வேலை என சென்னையில் வசிக்கின்றனர். அக்.,24ல் தீபாவளி பண்டிகை, 2023 ஜன.,ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். அச்சமயத்தில் ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்துவர்.விமான கட்டணம் ரூ.15 ஆயிரம் வரை இருக்கும். இதனால் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஊருக்கு வருவதில் சிரமம் ஏற்படும்.அதேசமயம் குறைந்த கட்டணம், கழிப்பறை வசதி, நிம்மதியான துாக்கம், பாதுகாப்பு காரணங்களால் பலர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். மதுரையை மையமாக வைத்து தீபாவளி, பொங்கல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குவது வழக்கம். தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்களான பாண்டியன், கன்னியாகுமரி, முத்துநகர், செந்துார், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.

Latest Tamil News
மதுரை வழியாக இரட்டை ரயில்பாதை வசதி உள்ளது. ரயில்வேக்கு வருவாயை பெருக்க மற்றும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை பகலில் இயக்க வேண்டும். வைகை எக்ஸ்பிரஸ் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில்போல் இடைநில்லா ரயில்களின் எண்ணிக்கையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் தென் மாவட்டங்கள் வளர்ச்சியடையும்.


வாசகர் கருத்து (11)

 • நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு -

  அப்படியே இந்த பெங்களூரு - திருநெல்வேலிக்கு கொஞ்சம் கவனிங்க , பண்டிகை காலத்துலயாவது ஒரு சிறப்பு இரயில் விடலாம்ல என்ன அநியாயம் பண்றாங்க.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நாடாளுமன்றத்தில் பேசலாம் .

 • Srprd -

  Vaigai express reduced to an ordinary express train by a certain politician many years back. It was running faster in MG. Shame on the Railway authorities!

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

  ஆம்னி பஸ் ஓனர் மட்டுமல்ல, தமிழக அரசே, கூடுதல் ரயில்கள் இயக்க மறைமுக முட்டுக்கட்டை போடுவது எத்தனை பேருக்கு தெரியும்? தாம்பரம் -காஞ்சிபுரம் - இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் ரூபாய் 20/- ஆனால் அரசு [சாதாரண] பேருந்து ரூபாய் 60?- இது ஒரு தடத்துக்கு மட்டும் ..சென்னை -மதுரை ரயிலில் இரண்டாம் வகுப்பு சீட் கட்டணம் ரூ 200/- அரசு பஸ் கட்டணம் ரூ-400/- ..தமிழக அரசு முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் , கூடுதல் ரயில்கள் கிடைக்கும்.. ரயில்வே அதிகாரியும் மனிதர்கள் தான்.. தமிழக அரசு [அது எந்த கழகமாக இருந்தாலும்] அதிகாரியை பலவிதத்தில் கவனித்து, ரயில் தேவையை ரயில்வே போர்டு கவனத்துக்கு கொண்டுசெல்வதை தடுக்கிறது. எனவே ரயில்கள் கூடுதலாக வருவதில்லை.. இதே காரணம் தான் சென்னை - திருவண்ணாமலை தடத்துக்கும். தென் மாவட்ட பஸ் தடம் அனைத்தும் போன் முட்டையிடும் வாத்து. எனவே தமிழக அரசுக்கு ரயில்கள் இயக்குவதில் விருப்பம் இல்லை. நாம் ரயில்வேயை குறை சொல்லி புண்ணியமில்லை..

 • N S Sankaran - Chennai,இந்தியா

  தமிழ் நாட்டின் சார்பாக ரயில்வேயிடம் குரல் கொடுக்க யாரும் கிடையாது. அரசியல்வியாதி அனைவருக்கும் ஓம்னிபஸ் முதலாளிகள் வீசும் கரன்சி நோட்டின் மீது மட்டும் கவனம். மதுரை குமரி இருவழிப் பாதை முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. அது முடியும் வரை கூடுதல் ரயில்களுக்கு சாத்தியம் இல்லை. தென் மாவட்ட ரயில்களின் நேரத்தை இப்போதே அரை மணி நேரம் தாராளமாக குறைக்கலாம். ஆனால் அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். இந்த பிள்ளை அநாதை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்