ADVERTISEMENT
மதுரை :மதுரை மாட்டுத்தாவணி ஸ்மார்ட் சிட்டி பழ மார்க்கெட் முன் 'ஜீரோ' சதவீத திட்டத்தில் கட்டப்பட்ட கடைகளுக்கு வாடகை வசூலிக்க மாநகராட்சி அதிகாரிகள் ஏன் தயங்குகிறார்கள் என தெரியவில்லை. இலவசமாக இயங்கும் இக்கடைகளால் பெரும் வருவாய்
இழப்பு ஏற்படுகிறது.
நமக்கு நாமே திட்டத்தில் கட்டுமானங்களை கட்ட இரண்டு பங்கு மக்களும், ஒரு பங்கு மாநகராட்சியும் நிதியைகொடுக்கும். ஜீரோ' சதவீ திட்டத்தில் மாநகராட்சிநிர்ணயித்த குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பயனாளர்மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். அதை வைத்து மாநகராட்சி தனது இடத்தில் கடைகளை கட்டி தரும். மாத வாடகையும் வசூலிக்கும்.
அந்த வகையில் பழ மார்க்கெட் முன் 100 கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அதில் 12 கடைகளை பயனாளர்கள் வாடகைக்கு விட்டுள்ளனர். மாநகராட்சி ஒரு கடைக்கு ரூ.11,340 வாடகை நிர்ணயம் செய்துள்ளது. ஜன., முதல் இதுவரை 12 கடைகள்உட்பட பிற கடைகளின்பயனாளர்களிடம் இருந்து இதுவரைவாடகை வசூலிக்கவில்லை. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடைகளை கட்டி தருவது குறித்த ஆர்டர் காப்பி'வழங்குவதிலும் வெளிப்படை தன்மை இல்லை.
அதே போல் 'ஸ்டார்' அந்தஸ்து பெற்றதை போல சில ஒப்பந்த நிறுவனங்கள் மாநகராட்சியை வலம் வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்த பணி முடிந்த கையோடு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடுகிறது. ஆனால், சில நிறுவனங்கள் பணி முடித்தும் ஒப்பந்த பணத்தை பெற முடியாமல் தவிக்கிறது. இதையும் மாநகராட்சி நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும்.
மதுரை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 525 நபர்களுக்கு 5 ஆண்டுகளுகள் ஓய்வூதியம் பணபயன் வழங்க படவில்லை. கேட்டால் பணம் இல்லை என்ற வசனம் மட்டும் வரும் யாரிடம் தெரியவில்லை. ஆணையாளர் தனி கவணம் செலுத்த வேணடும்