திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே 38 கி.மீ.,ருக்கான அகலப்பாதை பணி முடிந்து வெற்றிகரமாக சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தடத்தில் விரைவில் ரயில் சேவை துவங்க உள்ளோம். தேனி - போடி இடையே 17 கி.மீ., துாரத்திற்கான அகலப்பாதை பணிகள், இந்த மாதம் நிறைவடையும். இந்த தடத்திலும், ரயில் சேவையை துவங்க உள்ளோம். குறிப்பாக, போடியில் இருந்து சென்னைக்கு, நேரடி ரயில் சேவை துவங்குவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (7)
ரொம்ப சந்தோசம் அய்யா குமுலி - கூடலூரில் இருந்து கம்பம் உத்தமபாளையம் சின்னமணூர் போடி தேனீ பெரியகுளம் வத்தலகுண்டு திண்டுக்கல் வழியாக சென்னை வரை இயக்கினால் ரொம்ப சிறப்பாக இருக்கும் என்பதை கூறுவதில் ஆசை படுகின்றேன் நாடு முன்னேற நாட்டை ஆளும் அரசியல் வாதிகள் முயற்சி செய்யணும் என்பது மக்களின் கருத்து
இந்த திட்டம் வயதான, நோய்வாய்ப்பட்ட, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு மிகுந்த உதவிகரமாக திட்டம். நன்றி.
இது ஒரு சிறப்பான மக்களுக்கு பயன் தரும் திட்டம். உண்மையில் மக்கள் மேம்பாட்டில் அக்கறை உள்ள அலுவலர்களும் மக்கள் பணியாளர்களும் எதனை ஆதரிப்பார்கள். இந்த திட்டம் மக்களை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நன்றி.
காரைக்கால் பேரளம் ரயில்வே லைன் நீண்ட காலமாக இழுபறியில் இருக்கிறது இதை ரயில்வே லைன் நடைமுறைக்கு வந்தால் திருவாரூர் செல்ல வேண்டியதில்லை மேலும் திருநள்ளாறுக்கு நேரடி ரயில் சேவை கிடைக்கும். அதே போல ஒரு தலை ராகம் படத்தில் தான் நாம் தரங்கம்பாடி ரயில்வே நிலையத்தை நாம் பார்த்து இருக்கிறோம் மயிலாடுதுறை தரங்கம்பாடி ரயில்வே லைன் வெள்ளைகாரன் காலத்தில் போட்டது பிறகு அகல ரயில் பாதைக்கு இருந்த ரயில் பாதை நீக்கப்பட்டது பஸ் முதலாளிகளிடம் ஒரு கட்டிங் வாங்கி கொண்டு இரு மாநிலத்தின் ஊழல் அதிகாரிகள் கொழிக்கிறார்கள் தமிழகம் மற்றும் புதுவை
நன்றி. கூடிய சீக்கிரம் போடி சென்னை ரயில் சேவை வேண்டும். குறிப்புக்காக தென் மாவட்டங்கள் நிறைய ரயில்வசதி வேண்டும். குருவாயூர் புனலூர் எப்பொழுது மதுரை வரை நீடிக்க படும். திருவந்தபுரம் சென்னை பகல் இரவு சேவை மீண்டும் தொடங்க வேண்டும்.