Load Image
Advertisement

கோவையில் அமைதி திரும்பியது: மத நல்லிணக்க கூட்டம் நடத்த முடிவு!

கோவை: கோவை மாநகரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், பாதுகாப்பு பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த போலீசார், திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

Latest Tamil News


கோவை மாநகரில், செப்.,22ம் தேதியும், 23ம் தேதியும் கெரசின் குண்டு வீச்சு மற்றும் பஸ் உடைப்பு சம்பவங்கள் நடந்தன. 6 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. 2 அரசு பஸ்களில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பதற்றம் நிலவியதால் போலீசார், அதிவிரைவு படையினர் மாநகரில் அணிவகுப்பு நடத்தினர்.

சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., தாமரைக்கண்ணன் கோவைக்கு வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். சம்பவம் நடந்த இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 'சிசிடிவி' காட்சிப்பதிவுகள், உள்ளிட்ட ஆதாரங்கள் அடிப்படையில், பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபற்றதாக, எஸ்.டி.பி.ஐ., மற்றும் பி.எப்.ஐ., அமைப்பினர், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று கூறியதாவது:
கோவை மாநகரில் கடந்த மாதம் நடந்த சில அசம்பாவித சம்பவங்கள் காரணமாக, பாதுகாப்பு பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

Latest Tamil News

தற்போது இயல்பு நிலை திரும்பி விட்டதால், வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீசார், திருப்பி அனுப்பப்படுகின்றனர். கமாண்டோ படையினர் 100 பேர் உட்பட, 550 பேர் இதுவரை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வரும் வாரங்களில் மற்றவர்களும், அவரவர் பணியிடத்துக்கு திருப்பி அனுப்பப்படுவர்.

கெரசின் குண்டு வீச்சு தொடர்பாக, இதுவரை கோவை மாநகரில் மட்டும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலரை தேடி வருகிறோம். ஒரு சம்பவத்தில் மட்டும் இன்னும் புலன் விசாரணை நடந்து வருகிறது. மற்ற வழக்குகளில் துப்பு துலங்கி விட்டது.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை, போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி, போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Latest Tamil News

அவர்களிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில், பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய மற்ற நபர்கள், இதில் நடந்த சதித்திட்டம் பற்றிய தகவல்கள் தெரிய வரும். கோவை மாநகரில் அமைதியை நல்ல முறையில் பராமரிக்கும் நோக்கத்துடன், பல்வேறு தரப்பினரும் பங்கேற்கும், மத நல்லிணக்க கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு, கமிஷனர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (19)

  • sankaseshan - mumbai,இந்தியா

    கட்டுமரம் எழுதிய குப்பைகளை படித்துவிட்டு sivagiri ரொம்பதான் குழம்பி போயிருக்க்கிறாய் இப்போ பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மாகாணத்தை அரபியர்கள் ஹிந்து என்று சொன்னார்கள் எனவே இந்தியா ஹிந்துஸ்தானம் என்று சொல்லப்படுகிறது

  • David DS - kayathar,இந்தியா

    முஸ்லீம் மத நல்லிணக்க கூட்டம் நடத்துங்க. இந்துக்கள் எல்லாம் ஏற்கனவே நல்லிணக்கமா தான் இருகாங்க .

  • David DS - kayathar,இந்தியா

    mus ......

  • Girija - Chennai,இந்தியா

    தீவிரவாத செயல்களை யார் செய்தாலும் தடுத்து மக்களை காப்பது அரசின் வேலை. உங்களுக்கு பிரச்சனை என்றால் அரசிடம் முறையிடுங்கள்,போராடுங்கள், மோதுங்கள், கோர்ட்டுக்கு செல்லுங்கள். எதற்கு இதை மத நல்லிணக்கம் என்று பூசி மெழுக வேண்டும்?. முஸ்லீம் ஹிந்த்துக்களுக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லையே?

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    அண்ணாமலை அமெரிக்க பயணத்ததால், கோவையில் அமைதி திரும்பியது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்