Load Image
dinamalar telegram
Advertisement

100 வினாடி தொங்கினால் ரூ.1,000; மாமல்லபுரத்தில் விளையாட்டு

Tamil News
ADVERTISEMENT
மாமல்லபுரம் :சுற்றுலா பகுதியான மாமல்லபுரத்தில், சிற்பங்களை காண வரும் பயணியருக்காக கைவினைப் பொருட்கள், உணவு, தேநீர் உள்ளிட்ட கடைகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், 100 விநாடிகள் தொங்கினால் 1,000 ரூபாய் பரிசளிப்பதாக கூறி, பயணியரை வரவழைக்கின்றனர்.வெளியூர் நபர்கள், வெண்ணெய் உருண்டை பாறை பகுதியில், இத்தகைய விளையாட்டை நடத்துகின்றனர். பயணியர், தலா நுாறு ரூபாய் நுழைவுக்கட்டணம் செலுத்தி, நிலைநிறுத்தப்பட்ட கம்பியில், 100 வினாடிகள் தொடர்ந்து தொங்கவேண்டும்

என்றும், அவ்வாறு தொங்கினால் 1,000 ரூபாய் அளிப்பதாகவும் விளம்பர தட்டி வைத்துள்ளனர்.இளைஞர்கள், அதிகபட்சம் 50 - 70 வினாடிகளே தொடர்ந்து தொங்க முடிகிறது. எவருமே 1,000 ரூபாய் பரிசு பெற இயலாத நிலையே உள்ளது.இத்தகைய விளையாட்டு ஆர்வத்தை துாண்டி, பயணியரிடம் பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.இது மட்டுமின்றி கம்பி இணைப்பு சேதமடைந்தால், தொங்குபவர் கீழே விழுந்து காயமடையும் ஆபத்தும் உள்ளது. இதை தடுக்க வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement