இது உங்கள் இடம்: பாவம்... இந்த தமிழர்கள்!
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ஆயிரம் கைகள் கொண்டு மறைத்தாலும், ஆதவனை மறைக்க முடியாது. உண்மையை நீண்ட காலம் மறைத்து வைக்கவும் முடியாது. பொய் வேடம் நீண்ட நாள் நிலைக்காது என்பதை, தி.மு.க., தலைவர்கள் உணர வேண்டும். ஆதாரமோ, தகுந்த ஆவணங்களோ இல்லாமல், அண்ணாமலை எதையும் கூற மாட்டார்.
மிசாவில் ஸ்டாலின் சிறை செல்லவில்லை எனில், வேறு எந்த வழக்கில் சிறை சென்றார் என்பதையும், ஊர், உலகத்திற்கு அண்ணாமலை சொல்ல வேண்டும். ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் தி.மு.க.,வினர், தமிழக மக்களை முட்டாள்களாக்க, அவர்களின் அனுதாபத்தை பெற, இன்னும் என்னென்ன அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளனரோ தெரியவில்லை.

ஆனாலும், அந்தக் கட்டுக்கதைகள் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்தே தீரும். நல்லவேளை... தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அந்தமான் செல்லுலார் சிறையில் அடைபட்டு, சித்ரவதைக்கு ஆளானார் என்று சொல்லாமல் விட்டனரே... அப்படி சொல்லியிருந்தாலும், பாவம்... இந்த தமிழர்கள் நம்பியிருப்பர்.
வாசகர் கருத்து (75)
இந்த தேர்தலில் ஸ்டாலினுக்காக ஓட்டுபோட்டவர்கள் அவர் மிசா சென்றார் என்பதற்காக போடவில்லை ,அதையும் மீறி அவர் ஆட்சிக்கு வந்தபிறகு அவர் ஆட்சி மீதான விமர்சனம் தான் தேவையே தவிர, மிசாவில் சிறை சென்றாரா இல்லையா என்பது தேவையில்லாத ஓன்று , ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறை வெற்றியிருக்கிறார் திமுக ஆட்சியில் தான் தேர்தல் அறிக்கை பற்றியும் அதை நிறை வெற்றியிருக்கிறார்களா என்பது பற்றியும் விவாதம் வரும் , ஏனெனில் அவர்கள் மட்டுமே அதை மதிக்க கூடியவர்கள் , திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்து நிறைவேற்றிய திட்டங்கள் 1 ) 2 .1 கோடி அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோன நிவாரண நிதியாக ரூபாய் 4000 2 ) ஆவின் பால் லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்தது 3 ) மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் 4 ) தனியார் மருத்துவமனையில் கொரோன சிகிச்சை பெற்றவர்களுக்கும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் அரசே மருத்துவ செலவை ஏற்று கொண்டது 5 ) கூட்டுறவு சங்கங்களில் மகளீர் சுய உதவி குழுக்கல் பெற்றிருந்த 2756 கோடி ரூபாய் தள்ளுபடி 6 ) விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்து பெட்ரா கடன்கள் 5550 கோடி தள்ளுபடி 7 ) பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது 8 ) ஊரக பகுதிகள் வகர்ச்சிக்கு அண்ணா மறுஅமலர்ச்சி திட்டத்தின் கீழ் 1200 கோடி ஒதுக்கியது 9 ) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழை கட்டாய படம் ஆக்கி பிரமாநிலத்தவருக்கு நமது வேலை வாய்ப்பை தரை வார்த்துக்கொடுத்த முந்தய அரசின் தவறுக்கு முற்றுப்புள்ளி வைத்தது 10 ) ஸ்டெர்லைட் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கியது 11 ) ஸ்டெர்லைட் சம்பவத்தில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது 12 ) மகளீருக்கான பேறுகால விடுப்பை 9 மதத்திலிருந்து 12 மதங்களாக்கியது 13 ) மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகையாக மாதம் ரூபாய் 1000 வழங்குவது 14 ) மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்தது 15 ) கொரோநாவால் இறந்த மருத்துவர்களின் / காவலர்கள் மற்றும் முன் கல பணியாளர்கள் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் வழங்கிய பயன் படாது து 16 ) முற்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்களை இயற்றி அதை வாபஸ் பெற வைக்க அழுத்தம் கொடுத்தது 17 )குறுகிய காலத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது . என பல்வேறு நடவடிக்கைகள் கடந்த ஓராண்டில் நடை பெற்றிருக்கிறது , அதுபோல மோடியோ அல்லது அதிமுக ஆட்சியோ தான் செய்தவைகளையும் , திமுக செய்ய வேண்டியதை வலியுறுத்துவதும் ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது ,
"நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்' என்று கூறிக்கொண்டு நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் ஒரு படத்தில் உலாவருவார். அதேபோல் உள்ளது ஸ்டாலின் அவர்களின் செயலும் - நானும் நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட போது (emergency) மிசாவில் கைது செய்யப்பட்டேன் என்று கூறி மக்களை ஏமாற்றுவது.
நான் பொங்கிநா உனக்கு ஏன் எரிகிறது
திராவிடத் தந்தை ஈ.வெ.ரா. பற்றிய உண்மைகளை மறைத்து கழகங்கள் உருவாக்கி இருக்கும் அறியாமை யால் நீடிக்கிறது திராவிடம். அதனால் உருவானது திராவிட மாடல் பஜனை. தன்னைக் கன்னடியன் என்று பெருமையாகக் கூறிக்கொண்டு, திராவிடத்தை வடித்த ஈ.வெ.ரா.வின் பார்வையில் 'தமிழர்கள் காட்டு மிராண்டிகள்', 'தமிழ் காட்டுமிராண்டி மொழி', 'நியுசென்சு', 'தொல்காப்பியர் ஆரிய கைக்கூலி', 'தமிழ்த் துரோகி', 'திருக்குறள் தங்கத்தட்டில் வைத்த மலம்', 'தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்கலாம்', 'தமிழ்ப் புலவர்கள் சமூக விரோதிக
ஆரோக்கிய ஆரியன் அவர்களே வசதியாக முக்கிய வாக்குறுதியை மறந்து விட்டீர்களே. நீட் தேர்வு ரத்தின் ரகசியம், மாதம் தோறும் மகளிருக்கு 1000, இதுபோன்று பல. செஸ் ஒலிம்பியாட் ஒரு சாதனையாக. மனசாட்சியுடன் பேசுங்கள். டீசல் இன்று வரை குறைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் குறைந்த போதும். இதுபோன்று பல. யாரும் குறை சொல்வதற்காக சொல்லவில்லை. ஓட்டுக்காக பொய் சொல்லுவதை எதிர்க்கிறோம். 1967 முதல் ஆரம்பம். வரலாறை பாருங்கள்.