சென்னை இரண்டடுக்கு மேம்பாலம்: 2024 டிசம்பரில் திறப்பு: கட்கரி உறுதி
சென்னை--சென்னை துறைமுகம் - -மதுரவாயல் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள், 2024ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

சென்னை துறைமுகம்- - மதுரவாயல் இடையே மேம்பாலச் சாலை அமைக்க, 2009ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக, கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் சேத்துப்பட்டு கூவம் கரையில் துாண்கள் அமைக்கப்பட்டன. கடந்த 2011ல் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், இத்திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், 2016ல் இத்திட்டத்தை செயல்படுத்த மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது. வருங்கால சரக்கு வாகன போக்குவரத்து மட்டுமின்றி, பயணியர் போக்குவரத்தை கருத்தில் வைத்து, இரண்டடுக்கு மேம்பாலமாக கட்டப்பட உள்ளது.இதற்காக, 5,800 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை துறைமுகம் இடையே, இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். தற்போது, ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ௨௦௨௩ ஜன., மாதம் கட்டுமான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:புதிய இந்தியாவில், தடையற்ற பன்னோக்கு போக்குவரத்து இணைப்பை வழங்கும் வகையில், சென்னை துறைமுகம் - -மதுரவாயல் இடையே, இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. இது, 20.5 கி.மீ., நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக அமையும்.
இப்பணிகள், 2024 டிசம்பர் மாதம் முடிவடையும். இதன் வாயிலாக, சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48 சதவீதம் அதிகரிக்கும். துறைமுகத்தில் சரக்குகள் காத்திருப்பு காலம், ஆறு மணி நேரம் வரை குறையும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (18)
வரும் ஆனா வராது.( மதுரை எய்ம்ஸ் போல்)
எலேச்டின் வருது சீக்கிரம் முடியுங்கோ ?
இதை வைத்து தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிக்க, தமிழக எம் பிக்களை பிடிக்க திட்டம் போடுகிறார்கள் என்று சொல்லிக் கிட்டு ஒரு கூட்டம் வரும் பாருங்க...
தமிழக கழக அரசியல்வாதிகளின் அகந்தை மற்றும் சுய விரோதங்களால் தாமதமாகும் கட்டமைப்பு பணிகள் இது போல எத்தனையோ?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மத்திய அரசு இந்த திட்டத்தை முழுமையாக முடித்ததும், இப்பொழுதுள்ள ஸ்டாலின் அரசு ஸ்டிக்கர் ஒட்டி அந்த பாலத்தை திறந்து வைக்க முயலும்.