ADVERTISEMENT
மைசூர்: காங்கிரஸ் எம்.பி., ராகுல், ஒற்றுமை யாத்திரையின்போது கர்நாடகாவில் ஒரே நாளில் ஹிந்து மடம், மசூதி மற்றும் சர்ச் சென்று வழிபட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகம், கேரளாவைத் தொடர்ந்து தற்போது அந்த யாத்திரை கர்நாடகாவை அடைந்துள்ளது.
முன்னதாக தமிழகத்தின் நாகர்கோவிலில் நடைபயணத்தின் இடையே பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உள்ளிட்ட கிறிஸ்துவ மத போதகர்களை, சர்ச் வளாகத்தில் ராகுல் சந்தித்தார். இதில் ஜார்ஜ் பொன்னையா கடந்த ஆண்டு ஹிந்து மதத்திற்கு எதிராகவும், தேசத்திற்கு விரோதமாகவும் பேசியிருந்தார். அவரை ராகுல் சந்தித்தது பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில் யாத்திரையின் 26வது நாளான இன்று (அக்.,3) கர்நாடகா மாநிலம் மைசூரில் ஒரே நாளில் ஹிந்து மடம், சர்ச் மற்றும் மசூதிகளுக்கு சென்றுள்ளார். மைசூரில் உள்ள சுத்தூர் மடத்துக்கு சென்ற ராகுல், ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகளை சந்தித்து ஆசிப்பெற்றார்.

அதன்பிறகு மஸ்ஜித்-இ-ஆஜாம் மசூதிக்கு சென்றார். அங்கு இஸ்லாமியர்கள் ராகுலை வரவேற்று மாலை அணிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செயின்ட் பிலோமினா சர்ச் சென்று பார்வையிட்டார். அங்கு, கன்னியாஸ்திரிகளுடன் ராகுல் உரையாடினார்.


இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள ராகுல், 'எல்லா மத வழி தர்மங்களும் சமம். எல்லா தர்மங்களுடனான நல்லிணக்கமே இந்தியாவின் அமைதியான மற்றும் முற்போக்கான எதிர்காலத்தின் அடித்தளம்' எனப் பதிவிட்டுள்ளார்.
ஒரே நாளில் ஹிந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு ராகுல் சென்றதை பலர் வரவேற்றாலும், அரசியலுக்காக அவர் இதனை செய்துள்ளதாக சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து (23)
நீ தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் நடக்காத விஷயம். நீங்க நாட்டுக்கு செய்த துரோகமெல்லாம் போதும்.. இனியும் நீங்க நாட்ட ஆளமுடியுமென கனவு காண்பதை விடுத்து ஏதாவது பாணிபூரி கடைவைத்து உன் குடும்பத்தை காப்பாத்த வழி பாருமப்பா..
இது வேற அப்பப்ப.
பப்பு பண்ணின பண்ணுகிற பாவங்களுக்கு எத்தனை வழிபாட்டு தலங்களுக்கு சென்றாலும் மத தலைவர்களை சந்தித்தாலும் செய்த கர்மம் போகாது தொலையாது
எப்படியாவது எல்லா மதத்தினரின் ஆசிகளோடு நல்லபுத்தி வந்து அரசியலைவிட்டு சீக்கிறமே ஒரு முழுக்குபோட்டுவிட்டு ஒதுங்கிவிட்டால் சரி
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
எல்லா கடவுள்களையும் கும்பிடுகிறாராம்... சர்ச் இல் போய் உண்மையாக பிரார்த்தனை செய்து இருப்பார்... ஆனால் கோவில் மற்றும் மசூதியில்.. வேண்டா வெறுப்பாக.. பெயருக்கு போய் இருப்பார்....