ADVERTISEMENT
ஸ்டோக்ஹோம்: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்.,03) அறிவிக்கப்பட்டது. இதில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.

முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் கமிட்டியின் தலைவர் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவித்தார். 2022ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக' இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (2)
THE RELATIONSHIP BETWEEN HOMOSAPIENS AND EXTINCT HOMININS -வெகு காலமாகவே ஆர்வம் காட்டப்படும் ஒரு தலைப்பு.இதில் ஒருவர் சொன்னதை வேறு ஒருவர் சற்று மாற்றி சொல்வது வாடிக்கையாகி வருகிறது.மொத்தத்தில் இது ஒரு PLAGIARISM டாபிக்.அதாவது எது ஒரிஜினல் அல்லது டூப்ளிகேட் என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு நிலை.ஸ்வாண்டே பாபோ என்ன கண்டு பிடித்தார் என்பது போகப்போகத்தான் தெரியும். மலாலாவுக்கு நோபல் பரிசு கொடுத்ததில் இருந்து இந்த நோபல் பரிசின் மரியாதை மிகவும் குறைந்து விட்டது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அதென்ன கேக் வச்சி அரிவாளால் வெட்டுறவன் 4பேர் போட்டோ கிடைக்குது. நோபல் பரிசு பெற்றவரின் போட்டோ மட்டும் கிடைக்க வில்லையா என்ன.